உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு
ummaithaanae naan muzhuullathodu
உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு நேசிக்கிறேன் தினமும் உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
மாலை நேரத்திலே அழுகையென்றாலே காலையில் ஆனந்தமே இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும் நடப்பதெல்லாம் நன்மைக்கே
அல்லேலூயா ஆராதனை (4)
நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம் அருகில் நீர் இருக்கின்றீர் ஒடுங்கிப்போன உள்ளம் தேடி காயம் கட்டுகின்றீர்
நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும் அநேகமாயிருக்கும் விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும் வெற்றியும் தருகின்றீர்
புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே நடனமாட வைத்தீர் துயரத்தின் ஆடையை நீக்கினீரே துதிக்க செய்தீரையா
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal