உம்மைக் கண்ட நாள் முதல்
ummaik kanda naal mudhal
உம்மைக் கண்ட நாள் முதல் என்னை தந்தேன் தேவா எந்தன் வாழ்வு உந்தனுக்குச் சரணம்
1. குழியில் கிடந்தேன் என்னையும் எடுத்தீர் உயர் ஸ்தலத்தில் நிறுத்தி விட்டீர் உம்மைப் போலொரு நேசர் இல்லை உம்மைப் போலொரு இரட்சகர் இல்லை
2. ஒவ்வொரு நாளும் ஆரோக்கியம் தந்து ஆத்தும பெலத்துடன் நடத்தி வந்தீர் உம்மைப்போலொரு மீட்பர் இல்லை உம்மைப் போலொரு மேய்ப்பர் இல்லை
3. எந்தன் ஜீவியம் உம்கையில் தேவா எந்தன் சிந்தையும் உன் சிந்தை தானே உம்மைப்போல் ஒரு எஜமானும் இல்லை உம்மைப் போல் ஒரு மணவாளன் இல்லை
4. வானம் திறந்து மன்னாவை பொழிந்தீர் வாதை நீக்கி வளமாக்கி வைத்தீர் வந்தனம் தேவா வந்தனமே வாழ்வில் எனக்கு உம் தஞ்சமே
5. மறப்பேனோ உன் மாறாத வாக்கை மறப்பேனோ உன் தெய்வீக பாதை மாசில்லாத உன் அன்பை நினைத்து மன்னவா உமக்காய் வாழ்ந்திடுவேன்
6. கலங்கிய நேரம் கரத்தில் ஏந்தி கண்ணீர் துடைத்து கவலையை மாற்றினீர் காலையும் மாலை எல்லா வேளை கருத்துடன் பாடி புகழ்வேன் மகிழ்வேன்
More from Thuthi Osanna Geethangal
- அன்பு மேல அன்பே வைத்துanbu mela anbae vaithuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்புக்காக தினமும்anbukkaaga thinamumPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அன்பே அன்பே ஸ்தோத்திரம்anbae anbae sthothiramPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா உங்க கூட இருந்தாappaa unga kooda irundhaaPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அப்பா கூட இருக்கும்போதுappaa kooda irukkumbodhuPr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புத ராஜனே ஆனந்தத் தைலமேarpudha raajanae aanandhath thailamaePr. Jebas · Thuthi Osanna Geethangal
- அற்புதம் செய்தவர் யாருarpudham seydhavar yaaruPr. Jebas · Thuthi Osanna Geethangal
- ஆபத்திலே உலகமே ஓடுதய்யாaabathilae ulagamae odudhayyaaPr. Jebas · Thuthi Osanna Geethangal