திரித்துவ தேவா மகிமைப்
thirithuva devaa magimaip
திரித்துவ தேவா மகிமைப் பிரதாபா திருப்பாதம் பணிந்து நின்றேம் பரிசுத்தமான பரமனே உம்மை பாடியே தொழுதிடுவோம்
இத்தரை தன்னிலே சத்தியன் நாமத்தை மெத்தமும் பாடிடுவோம் நித்தியனாம் எங்கள் நிமலனின் பாதத்தை நித்தமும் தொழுதிடுவோம் வித்தகனே உந்தன் வியத்தகு செயல்களை விளக்கியே கூறிடுவோம் கர்த்தாதி கர்த்தனே கருணைப்பிரவாகனே களிப்புடன் பாடிடுவோம்
சுரமண்டல கீத சத்தங்களாலும் கர்த்தனை தொழுதிடுவோம் பரமண்டலத் தந்தை பரம சழூகத்தில் பாடல்கள் பாடிடுவோம் நிறை கடல் போலவே நின்றெம்மைக் காக்கும் நித்தனே உமைத் தொழுவோம் வருவாய் பரனே வல்லமெய் தேவா வந்தனை புரிந்து நின்றேம்
எங்கும் நிறைந்திட்ட இணையற்ற தேவா எங்கட்கு வரம் அருள்வாய் பொங்கும் பேரின்பத்தில் புதுப்பெலனடைய ஆவியைப் பொழிந்திடுவாய் வல்லமெய் தேவா வந்தெம்மைத் காவாய் வல்லமை தந்திடுவாய் நல்ல உம் நாமத்தை நானிலத்தில் கூற நாவினில் நிறைத்திடுவாய்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m D7 G Em A A7 D D F#m D7 G Em A A7 D G G D Em A A7 D D F#m D7 G Em A A7 D G G D Em A A7 D D F#m D7 G Em A A7 D G G D Em A A7 D
More from Idimuzhakka Geethangal
- அக்கினி இறக்கும் தேவாakkini irakkum devaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா ஆர்ப்பரிalleluya aarppariRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாalleluya en aathumaaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaeRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- அழைக்கிறர் இயேசு உன்னைazhaikkirar yesu unnaiRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆதி அந்தம் அனைத்துமானaadhi andham anaithumaanaRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- ஆத்ம நேசரே எந்தன்aathma nesarae endhanRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal
- இயற்கையின் அழகில்iyarkaiyin azhagilRev. Dr. S. Justin Prabakaran · Idimuzhakka Geethangal