ஒரு நாளும் அழியாத
oru naalum azhiyaadha
ஒரு நாளும் அழியாத உறவென்னிலே உருவாக்கும் அருளேசு வரவென்னிலே பிளவில்லை அன்பில் துயரில்லை நெஞ்சில் எனை ஆளும் அவரன்பு இனி நாளுமே
நட்பென்னும் வானங்கள் இருள் மூடும் போதிலே உறவென்னும் கீதங்கள் உருமாறும் போதிலே உன் அருளன்பு எனைத் தாங்குமே அன்பென்னும் கீதங்கள் அணைகின்ற நேரங்கள் ஒளியாக எழுந்து உயிரோடு கலந்து ஒரு நாளும் அழியாத உறவொன்று தா
இனி என்னில் வாழ்வதோ நானல்ல நீ இயேசுவே இரவென்ன பகலென்னவோ இதயத்துள் நீ பேசவே இனி எந்நாளும் பயம் இல்லையே முடிவில்லா வாழ்வுக்கு முதலாகும் இயேசுவே ஊரெங்கும் செல்வேன் உன் நாமம் சொல்வேன் உன்னன்பில் நிலையாகும் வரமொன்று தா
நம்பிக்கை நீயல்லவோ நலமாக்க வா இறைவா நெஞ்சுக்குள் நோயல்லவோ குணமாக்க வா இறைவா இனி நானுந்தன் சேயல்லவோ கனிவுடன் கேட்கின்றேன் கருணைக்கண் நோக்குமே காலங்கள் தோறும் உன் பாதங்கள் வேண்டும் சோகங்கள் அங்கே கண் மூடித்துயிலும்
More from Meetpin Geethangal
- அன்பின் சமூகமேanbin samoogamaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல்aruthus serkka aalillaamalBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா அல்லேலூயா விடுதலைalleluya alleluya vidudhalaiBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அல்லேலூயா கல்வாரிalleluya kalvaariBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- அழைக்கிறார் அழைக்கிறார்azhaikkiraar azhaikkiraarBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆயிரம் ஸ்தோத்திரமேaayiram sthothiramaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரேaaviyaanavarae anbin aaviyaanavaraeBro. Cruz Divakaran · Meetpin Geethangal
- ஆவியைத் தாரும் இயேசுவேaaviyaith thaarum yesuvaeBro. Cruz Divakaran · Meetpin Geethangal