நம்பிக்கையினால் நீ
nambikkaiyinaal nee
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம் படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்
அதிசயக் கல்வாரி சிலுவையிலே அனைத்தையும் செய்து முடித்துவிட்டார் தழும்புகளால் நீ சுகமானாய் தயவினால் மறுபடி பிறந்துவிட்டார்
ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் - என்று அறிக்கை செய்து சுகமடைந்தாள் ஒருத்துளி சந்தேகமில்லாமலே ஓடிவா இயேசு இன்று சுகம் தருவார்
ஆபிரகாம் சாராள் குழந்தைப் பெற ஆற்றல் பொற்றது நம்பிக்கையினால் வாக்குதத்தம் செய்தவர் நம்பத்தக்கவர் ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் - உன்
கட்டாந்தரையிலே நடப்பதுபோல் கடலைக் கடந்தனர் நம்பிக்கையினால் எரிகோ மதில்கள் விழுந்தனவே ஏழுநாள் ஊர்வலம் வந்ததினால்
உலகிலே இருக்கும் அவனை விட உனக்குள் இருப்பவர் பெரியவரே துணை நின்று உனக்காய் யுத்தம் செய்வார் துரிதமாய் வெற்றி காணச் செய்வார்
மலையைப் பார்த்து கடலில் விழு என்று சொன்னால் நடந்திடுமே உன்னாலே கூடாதது ஒன்றுமில்லையே நம்பினால் எல்லாம் நடந்திடுமே
நம்பிக்கையினால் நாம் வாழ்வு பொறுவோம் நலமுடன் வாழ்ந்து ஜெயம் எடுப்போம் பயம் இல்லையே திகில் இல்லையே படைத்தவர் நம்மை நடத்தி செல்வார்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal