நம்பிக்கைக்கு உரியவரே
nambikkaikku uriyavarae
நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் - 2
சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் - 2 வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே - 2
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு
உம்மை நம்புகின்ற மனிதர்களை உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் - 2 உள்ளமெல்லாம் மகிழுதையா உம் வசனம் நம்புவதால் - 2
தீமை அனைத்தையும் விட்டு விலகி உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் - 2 எலும்புகள் உரம் பெறும் என்உடலும் நலம் பெறும் - 2
புயலின் நடுவிலே பக்தன் பவுல் வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் - 2 கைதியாக கப்பல் ஏறி கேப்டனாக செயல் பட்டான் - 2
வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி திரளாய் பேதுரு மீன் பிடித்தார் - 2 உம் வலையில் பிடிபட்டார் தலைவனாக செயல்பட்டார் - 2
உமது வார்த்தைகள் கைக் கொண்டு உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால் - 2 கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன் ஊற்று நீராய் பொங்கிடுவேன் - 2
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal