நாம் ஒருமித்து
naam orumithu
நாம் ஒருமித்து வாழ்வோம் என்றால் நம் நடுவில் இயேசு நிற்பாரே - (2) - அப்போது இருபதில் இருபதற்கு மேல் எப்படி நம் நடுவில் இயேசு நிற்பதால் - எப்படி நம் நடுவில் இயேசு நிற்பதால்
1. போட்டிகள் பொறாமைகள் கசப்புகள் சதிகள் எதுவும் எங்கும் இல்லை சிறியவன் பெரியவன் பதவிகள் அதிகாரம் என்பது யாரிலும் இல்லை - (2) பழைய மனுஷன் இல்லை நம்மில் பாவ சுபாவமே இல்லை - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
2. கேபா, அப்பல்லோ, பவுல் என்ற பிரிவினை நம்மில் இல்லை அவர்கள் கூட்டம் இவர்கள் கூட்டம் என்பார் யாருமே இல்லை - (2) சபைகள் ஸ்தாபனம் இல்லை நம்மில் வடக்கு தெற்கும் இல்லை - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
3. உயர்ந்த குலத்தோர் தாழ்ந்த குலத்தோர் என்ற தத்துவம் இல்லை இரண்டு டம்ளர் இரண்டு வரிசை என்ற வித்தியாசம் இல்லை - (2) அன்பின் வெள்ளம் உண்டு அவைகளை அடித்துச் செல்லுதல் உண்டு - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
4. ஒருவர் கால்களை ஒருவர் கழுவும் பணிவிடை ஆவியே உண்டு ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும் சேவை உள்ளமே உண்டு - (2) தலைக்கணமே இல்லை நம்மில் இடைவெளியே இல்லை - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
5. ஆவியின் வல்லமை அனைவர் தலையிலும் வந்து இரங்குதல் உண்டு அற்புதம் அடையாளம் ஆச்சரியம் அதிசயம் சபையிலும் தளத்திலும் உண்டு - (2) பேய்கள் ஓடுதல் உண்டு எங்கும் விடுதலை ஆவியே உண்டு - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
6. ஏழு நதியிலும் இரவும் பகலும் திரு முழுக்குகள் உண்டு சீரும் சிறப்பும் பெற்று மகிழும் பாரதம் ஓர்நாள் உண்டு - (2) சட்டம் ஒழுங்கு உண்டு எங்கும் நீதி நியாயமே உண்டு - ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்? நம் நடுவில் இயேசு நிற்பதால் - நாம்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal