கூடிச் சேருவீர்
koodis seruveer
கூடிச் சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர் உள்ளத்தில் இயேசுவின்பால் அன்புகொண்டோர் யாரும் கூடுவீர் - 2 கல்வாரிக்கருகில் கூடுவீர் - (2)
1. சிறுவர் நடுவர் முதுவர் யாரும் சேர்ந்து கூடட்டும் உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும் - 2 துதியின் கீதம் எழும்ப ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும் அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும்
2. கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார் விகற்ப மின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார் - 2 அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்குவார் கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்?
3. இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள்மட்டும் மிஷனரிகள்’ என்ற வார்த்தைப் பேசப்படட்டும் - 2 தியாகம் புரிவார் மேலும் மேலும் எழும்பி வரட்டும் இயேசுவின் உள்ளம் அதனால் பூரிப்பாகட்டும்
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal