ஜீவனுள்ள தேவனை சேவிப்பார்
jeevanulla devanai sevippaar
ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ? ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ? ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே ஜீவனை வெறுப்பவனோ பற்றிக் கொள்வானே - நம்மிலே
மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு? ஜீவாதிபதி இயேசு தம் ஜீவனை கொடுத்ததால் திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு? பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் - நம்மிலே
சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு? இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு? ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால் சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் - நம்மிலே
பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும் உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பனும் உலகத்தையும் மேன்மையையும் உதறித்தள்ளணும் சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் - நம்மிலே
வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்? இரத்தத்தில் தம் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர் ஜீவனை வெறுத்து சிலுவையை எடுத்து வெற்றிகீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் - நம்மிலே
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal