இராஜா உம்மை
iraajaa ummai
இராஜா உம்மைப் பார்க்கணும் இராப்பகலாய் துதிக்கணும் வருகைக்காய் காத்திருக்கின்றேன் எப்போது வருவீர் ஐயா
இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொண்டேன் நிச்சயமாய் உறக்கத்தில் இருந்து நான் உமைக்காண விழித்துக் கொண்டேன்
வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன்
மணமகனை வரவேற்கும், மதி உடைய கன்னிகை போல விளக்கோடு ஆயில் ஏந்தி, உமக்காக வெளிச்சமானேன்-வரவேண்டும்
உண்மையுள்ள ஊழியனாய், நீர் கொடுத்த தாலந்தை உம் பயன்படுத்தி பெருக்கிடுவேன் மகிழ்ச்சியில் பங்கடைவேன்
தாராளமாய்க் கொடுத்திடுவேன், தாங்கிடுவேன் ஊழியங்கள் அனாதை ஆதரவற்றோர் கண்ணீரைத் துடைத்திடுவேன்
ஊழியத்தில் உதவிடுவேன், புத்தி சொல்வேன் போதிப்பேன் இறைவாக்கு உரைத்திடுவேன் எப்போதும் துதித்திடுவேன்
அந்தகார கிரியைகளை, அகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன் இச்சைக்கு இடங்கொடாமல் இயேசுவையே தரித்துக் கொண்டேன்
குடிவெறி களியாட்டம் வேசித்தனம் விட்டுவிட்டேன் சண்டைகள், குறை சொல்லுதல் அடியோடு வெறுத்துவிட்டேன்
வீண்பெருமை தேடாமல், பொறைமை கொள்ளாமல் இழிவான உணர்வுகளை, சிலுவையிலே அறைந்துவிட்டேன்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal