இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
indru mudhal naan unnai aaseervadhippen
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் உனது பெயரை நான் உயர்த்திடுவேன் ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன் சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன் நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்
பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால் வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன் இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன் பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள் உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள்
வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய் கடற்கரை மணலை போல பெருகிடுவாய் எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்
நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே பகை நிறைந்த உலகத்தில் அன்பு கரம் நீட்டிடுவாய்
மாராவின் கசந்த கண்ணீர் மதுரமாகிடும் பன்னிரெண்டு நீரற்றும் ஏலீமும் உனக்கு உண்டு கல்வாரி நிழலதனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய்
கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்துவந்தால் வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான்
உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன் மலடு இருப்பதில்லை அபார்ட்டின் (Abortion) ஆவதில்லை ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Eb Cm Gm Bb Eb Cm Eb Cm Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm G Bb Eb Cm Cm7 Cm Eb Cm G Bb Eb Cm Cm7
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal