ஏற்ற காலத்தில் உன்னை
etra kaalathil unnai
ஏற்ற காலத்தில் உன்னை உயர்த்திடுவார் ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார்-2 சோர்ந்து போகாமல் நீ அவசரப்படாமல்-2 அழைத்தவரின் கரத்தில் நீ அடங்கி இருந்தால்-2
1.உலக தோற்றம் முன்னே உன்னை முன்குறித்தாரே தாயின் கரப்பத்தில் உன் கருவை கண்டாரே-2 உள்ளங்கையிலே உன்னை வரைந்துள்ளார் உன்னை உயர்த்துவார் கர்த்தருக்கு காத்திரு-2
2.காலத்திற்கு முன்னே நீ அவசரப்படாதே கர்த்தர் குறித்த நேரத்திற்கு பொறுமையாய் காத்திரு-2 உன்னைக்கொண்டு தான் செய்ய நினைத்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றுவார்-2
3.உன்னை விழுங்கிட சாத்தான் சுற்றித்திரிகிறான் தெளிந்த புத்தியோடயே நீ விழித்துக்கொண்டிரு-2 விசுவாசத்தில் உறுதியாய் இருந்து சாத்தானை ஜெயித்து நீ வாழ்ந்திடு -2
ஏற்ற காலத்தில் என்னை உயர்த்திடுவார் ஏற்ற வேளையில் பயன்படுத்திடுவார் -2 சோர்ந்து போகமாட்டேன் நான் அவசரப்படமாட்டேன்-2 அழைத்தவரின் கரத்தில் - நான் அடங்கி இருப்பேன்
More from Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவரே அன்பின் ஆவியானவரே உந்தன் அபிஷேகத்தால்aaviyaanavarae anbin aaviyaanavarae undhan abishegathaalBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குaaviyaanavar namakkulle vaasam seyvadharkuBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இது கிருபையின் நாட்களல்லவாidhu kirubaiyin naatkalallavaaBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இதோ மனிதர்கள் மத்தியில்idho manidhargal mathiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இந்த நாள் கர்த்தர் உண்டு பண்ணினார்indha naal karthar undu panninaarBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசு நல்லவர் நம்yesu nallavar namBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் அன்பை தியானிக்கையில்yesuvin anbai thiyaanikkaiyilBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai
- இயேசுவின் இரண்டாம் வருகைyesuvin irandaam varugaiBro. Wesley Maxwel · Ezhuputhalae Engal Vaanjai