என்னென்று சொல்வேன்
ennendru solven
என்னென்று சொல்வேன், எங்கு நான் செல்வேன் கர்த்தாவின் பேரன்பை விட்டு - (2) நான் பெற்ற அன்பு எத்தனை அதிகம் - (2) கர்த்தாவின் இணையற்ற அன்பு - என்னென்று
காலையும் மாலையும் கருத்தினில் நிற்கும் கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு-(2) நினைவிலும் கனவிலும் நீங்காது நிற்கும் - (2) கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு - என்னென்று
மண்ணில் பிறந்து மண்ணோடு போகும் மனிதர்க்கு ஏன் இந்த அன்பு - (2) மதிப்பிற்கு உரியோர், மகிமைக்கு உரியோர் - (2) என்பதே கர்த்தாவின் தீர்ப்பு - என்னென்று
பார்வோனின் அடிமைகள் கண்டதோர் வெற்றி உலகத்தின் மனிதர்கள் பெற்றார் - (2) பாவத்தில் வெற்றி மரணத்தில் வெற்றி - (2) ஏற்பவர் அனைவர்க்கும் வெற்றி - என்னென்று
அன்பிற்கு ஏங்கும் உள்ளங்கள் உண்டோ இயேசுவின் அன்பை போல் உண்டோ - (2) முகம்பார்த்து அல்ல அகம் பார்க்கும் அன்பு - (2) அனைவர்க்கும் உரித்தான அன்பு - என்னென்று
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal