அழைக்கிறார் நீ ஓடிவா
azhaikkiraar nee odivaa
1. அன்பின் உருவம் ஆண்டவர் அழைக்கிறார் நீ அருகில் வா தொய்ந்துபோன உன் வாழ்வினை கேட்கிறார் நீ அருகில் வா
ஓடிவா நீ ஓடிவா கண்கலங்கியே நீயே வா தூரமாய் நிற்கும் உன்னைத்தான் அழைக்கிறார் நீ அருகில் வா - 2
2. மனிதர் பலரை நம்பினாய் பலமுறை தடுமாறினாய் உற்றார் பெற்றார் அன்பெல்லாம் கனவு போன்று அகலுமே - ஓடிவா
3. நண்பர் பலரும் இருப்பினும் நாடும் அன்பைப் பெற்றாயோ செல்வம் எல்லாம் மாய்கையே உலகம் கானல் நீராமே - ஓடிவா
4. ஒருமுறை அன்பை ருசித்துமே விழுந்துபோன நீ எழும்பிவா பலமுறை துரோகம் செய்ததால் இயேசுவின் கண்ணீர் துடைக்கவா - ஓடிவா
5. இன்னும் நொந்து போவானேன் இன்றே அருகில் ஓடிவா உள்ளம் குமுறும் உன்னையே தள்ளேன் என்றார் ஓடிவா - ஓடிவா
More from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal