அழகாய் நிற்கும் யார் இவர்கள்
azhagaay nirkum yaar ivargal
அழகாய் நிற்கும் யார் இவர்கள் திரளாய் நிற்கும் யார் இவர்கள் சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்தளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்
எல்லா ஜாதியார் எல்லா கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர்
வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டு வெள்ளை குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் பிதாவின் (சிங்காசனம்) முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று
தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்றும் நின்றவர்கள் யாசித்தாலும் போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள்
இனி அவர்கள் பசியடையார் இனி அவர்கள் தாகமடையார் வெயிலாகிலும் அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை
ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை அற அகற்றி துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே
ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ பெரிதானதோ பெற்றப்பணி செய்து முடித்தோர்
காடு மேடு கடந்த சென்று கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள்!
ஒன்றே ஒன்று என்வாஞ்சையாம் அழகாய் நிற்போர் வரிசையில் நான் ஓர் நாளினில் நின்றிடவும் இயேசு தேவா அருள்புரியும்
ஆதி பிதாவே ஆட்டுக்குட்டியே தூய ஆவியே துதி ஸ்தோத்திரம் கன மகிமை பெலன் வல்லமை என்றென்றைக்கும் உம்முடையதே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bb Eb Bb
Gm F Bb
Gm Adim Eb Bb D
Bb F Bb
Bb D Gm Eb
F Cm Gm Bb
D7 Gm
Eb F Cm Gm Bb
Bb D Gm Eb
F Cm Gm Bb
D7 Gm
Eb F Cm Gm Bb
Bb D Gm Eb
F Cm Gm Bb
D7 Gm
Eb F Cm Gm BbMore from Seyal Veerar Geethangal
- அதிசயமான ஒளி மாய நாடாம்adhisayamaana oli maaya naadaamBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அந்த நாள் வந்திடும்andha naal vandhidumBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அனைத்து சமயத்துanaithu samayathuBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் ஆண்டவரேanbin aandavaraeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்பின் உருவம் ஆண்டவர்anbin uruvam aandavarBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அன்புள்ள இயேசையாanbulla iyesaiyaaBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அரியதோர் செய்தி பெற்றோம்ariyadhor seydhi petromBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal
- அல்லேலூயா கர்த்தரையேalleluya kartharaiyaeBro. Emil Jebasingh · Seyal Veerar Geethangal