அன்புருவான ஆண்டவர்
anburuvaana aandavar
அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான் அனுதினமும் புகழ்ந்து பாடிடுவேன் நான் அவர் என்னை தேடி வந்தார் ஆனந்த வாழ்வை தந்தார் ஆனந்தம் ஆனந்தமே
பாலை நிலமான என்னை சோலைவனமாக செய்தார் பாவ வாழ்வில் உழன்ற என்னை தூய வாழ்வை தொடரச் செய்தார் புழுவான எனக்கு தன் புது ரூபம் தந்தார் அழுகின்ற என் நெஞ்சுக்கு ஆறுதல் ஈந்தார் வழிகாட்டி வாழ்விக்க வழியாக வந்தார் பழி பாவம் இல்லா சத்திய பாதையை தந்தார் இயேசுவே என் வாழ்வின் பேரின்பமே
மண்ணுலக மாய வாழ்வில் மதிமயங்கி அலைந்த என்னை பொன்னுலக வாழ்வில் சேர்க்கும் புனித வழி நடக்க செய்தார் மண்ணான எனக்குத் தன் மகிமையை தந்தார் மாறாத மெய்யன்பை என் மீது பொழிந்தார் மறு ரூபம் நான் பெறவே மறு பிறப்பு ஈந்தார் மகிமை மேல் மகிமை பெற மாகிருபை தந்தார் மாதேவன் துதி பாடி மகிழ்ந்திடுவேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
B C B C Em B Em B C B B Em B B Em C B C B B B C C B C B B B Em B B Em C B C B B B C C C B B C C B
Related songs
- அத்திமரம் துளிர் விட்டதுathimaram thulir vittadhuEvg. Sirkali Yesuprakasam
- அனாதி அன்பால் அழைத்தanaadhi anbaal azhaithaEvg. Sirkali Yesuprakasam
- அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவேanudhinamum ummil naan valarndhidavaeEvg. Sirkali Yesuprakasam
- அன்பே தான் உருவாக வந்தார்anbae thaan uruvaaga vandhaarEvg. Sirkali Yesuprakasam
- அன்று சொன்ன இயேசுandru sonna yesuEvg. Sirkali Yesuprakasam
- அருளாளர் தலைமுறையின்arulaalar thalaimuraiyinEvg. Sirkali Yesuprakasam
- அழைத்தவர் இயேசு என்றும்azhaithavar yesu endrumEvg. Sirkali Yesuprakasam
- ஆடுங்கள் கொண்டாடுங்கள்aadungal kondaadungalEvg. Sirkali Yesuprakasam