ஆகாதது எதுவுமில்லை
aagaadhadhu edhuvumillai
ஆகாதது எதுவுமில்ல உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர்
வல்லவர் சர்வ வல்லவர் நல்லவர் எப்போதும் நல்லவர் எல்ஷடாய் அல்லேலூயா
துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் - 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
அலங்கார வாசலிலே அலங்கோல முடவன் அன்று நடந்தானே இயேசு நாமத்தில் - 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெரும் கூட்டமாய் - 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்து தூக்கி விட்டீர் - 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாள் - 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லையே - 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே சேதமின்றிக் காப்பாற்றினீர் - 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே - 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா - 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
More from Jebathotta Jeyageethangal
- அகில உலகம் நம்பும்agila ulagam nambumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்akkini neruppaay irangi vaarumFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அக்கினி மூண்டது அனல்akkini moondadhu analFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அசட்டை பண்ணாதேasattai pannaadhaeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அடிமை நான் ஆண்டவரேadimai naan aandavaraeFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதி சீக்கிரத்தில்adhi seekkirathilFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை நேரம்adhigaalai neramFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal
- அதிகாலை ஸ்தோத்திர பலிadhigaalai sthothira paliFather. S. J. Berchmans · Jebathotta Jeyageethangal