இயேசு திருநாமம் ஈய உயர் மகிமையில் ஜெய மகிழ்
yesu thirunaamam eeya uyar magimaiyil jeya magizh
1.இயேசு திருநாமம் இய உயர் மய நய ஜெய பெயர் இயேசு திரு நாமம் எனக்குயிரே; ஆசிர் வாதந்தா, நின் ஆசிர்வாதந்தா, ஆசிர்வாதம் தேசுறு பாதம் மேசியா நீதா.
2. விண்ணுலகோர் பாட மண்ணுலகோர் அடிபணிந் தேற்றிட பாதாளத்துள்ளோரும் பயந்தோடவே எந்தன் நடு வா, வா, உந்தனருள் தா, தா, வந்தனம் சந்ததம் என்றுமே தந்தனம் உந்தனடிமை யாம்.
3. மந்தையாயர் தேடி கந்தையணிந்த குழந்தைய தாயுனை கன்னிமரி தாயார் விந்தை மகவாய் முன்னணையிலே ஓர் பொன்னகரோனே யேசையா உன் நேசங்கண்டார் ஆசையா யோடி.
4. இந்தச் சபையோரும் உன் செயலா மிதை நன் றுணர்ந்தே புகழ் மிஞ்சவே கொண்டாடி என்றும் போற்றவே நெஞ்சும் வாக்கும் செய்கை ஒன்றித்தே யுன் மீட்பை சென் றுல கெங்கும் தந்தையுன் னன்பை நன்று காட்டவே.
5. கன்னிகையின் சேயா காதல் மிகும் மணவாளா நனிதோழா மன்னவர் நின் தந்தைக் கென்றும் துதியே விண்ணுயரமே யெம் பண்ணெழும் பவே என்னில் பாச மேவச் செய்யும் ஏக ஆவியே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal