இயேசு தான் வல்ல தேவனே
yesu thaan valla devanae
இயேசு தான் வல்ல தேவனே இதயத்தில் வாசம் பண்ணும் ஜீவனே என்று நாமே போற்றுவோமே எண்ணில்லா நன்மை செய்யும் இயேசு தேவனே
குற்றமற்ற தேவனே என் பாவம் முற்றும் தீர்ப்போனே உற்றவர்க்கும் மற்றவர்க்கும் கொற்றவனாய் வந்தோனே அன்பு கூர்ந்து அடி பணிந்தால் எண்ணிலா நன்மை செய்யும் இயேசு தேவனே
பாவமில்லா தேவனே என்பாவம் நீக்க வந்தோனே சாபம் ரோகம் யாவும் நீக்க சக்திதந்த தேவனே தஞ்சம் என்று கெஞ்சி வந்தால் அஞ்சிடேல் என்றணைக்கும் இயேசு தேவனே
நீதிமான் களில்லையே நேசர் இயேசு போலவே சுத்தம் செல்வம் நற்சகாயம் சமாதானம் கொள்ளவே நன்றியுள்ள நெஞ்சத்தோடு அண்டினால் ஆசீர் அருளும் அன்பு தேவனே
சோதனை சகித்தவர் பாடனுபவித்தவர் சோதிக்கப் படுபவர்க்கு உதவி செய்ய வல்லவர் பாவ பேயை சாகழித்து ஜீவனை தந்து மீட்ட தேவ தேவனே
சுத்த தேவ ஆவியே நித்தம் நம்மில் மேவியே குற்றமற்ற ஜீவியம் செய்ய வழி நடத்தும் நம்மையே காத்திருந்தால் புதிய ஞானம் பரத்திலிருந் தருளும் பரிசுத்த ஆவியே
சாத்தானை மிதித்தவர் மரணத்தை ஜெயித்தவர் மரித்துயிர்த்து பரத்தில் சென்று பரிந்து பேசுகின்றவர் கிருபை காலம் நம்மை தாங்க பொறுமையாய் வேண்டி நிற்கும் இயேசு தேவனே
நியாய தீர்ப்பு நெருங்குதே தேவ கிருபை தாங்குதே ஜீவ வார்த்தை ஒவ்வொன்றாக நிறைவேறி வருகுதே பாவியே நீ ஓடிவந்து தாவியே இயேசுபாதம் அண்டிக்கொள்ளுவாய்
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal