இயேசு சுவாமி நீர்வாரும்
yesu suvaami neervaarum
இயேசு சுவாமி நீர்வாரும் இரட்சகா நீர்வாரும் என்னையா இஷ்டம் வைத்தே திருக்கண்ணால் பாரும் ஏதமே கெடப்பாதந் தாருமையா.
1.நேச சத்திய கிறிஸ்தேந்திரா நீதியாதிப சுந்தரா நேமியாளுது ரந்தரா நீசவேத கற்பனை மந்திரா நிரந்தரா ஞானேந்திரா.
2. மாட்டுக்கொட்டிலிலே பிறந்தெனை மீட்டடிமை கொண்டீரோ மாண்டெனைப் புரந்தீரோ ஆண்டநாதா சிறைமீண்ட தாதா அன்பு பூண்டதாதா உன்னதா.
3. மட்டில்லாத மகத்துவப் பிதாவின் நேய மைந்தாவே வானவர் தொழுந் தேவே மனுவேல் தவிது நங்கோவே வரந்தாவே யன்பாவே.
4. மந்தையாயர் மகிழ்ந்தடி தொழ வந்த என் பெருமானே வந்தனம் ஞானப் பூமானே அனந்த பாக்கிய சீமானே வாஞ்சையானேன் கோமானே.
5. சத்திய பரா திரிதத்துவா சமஸ்த நன்மைச் சொரூபா சருவ லோக ஜீவ தயாபா தவறாத நித்திய பிரஸ்தாபா ததிதேவா யேயோவா.
6. முற்பிதாக்கள் தெரிசிமுனிவர் பார்க்க விரும்பும் நாட்டா மோசே கண்ட கொண்டாட்டா கவி வேதநாயகன் பாட்டா எனின் றேட்டா மன்றாட்டா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal