யேசு பாலகனே நான் பாவி
yesu paalaganae naan paavi
யேசு பாலகனே நான் பாவி யென்னையாளுமேவி- யேசுபாலகனே
1.ராஜதவிதா சன கிரிடா திபனே தேவ ராக்கினி மரிதந்த பிரதாபனே நேச மனதோடு மனு வாகியெனை யாளவந்த நித்தனே கிருபை வைத் தெனை முற்றிலு மாண்டு கொள்ளையா.
2. பாவ மீறுதே சென்மச் சுபாவப் பாதக மயக்கந் தலை மீதிலேறுதே காவில் முந்த மேவி வந்த தீவினைப் பசாசு பயங் காட்டுதே போராட்டங்கள் பா ராட்டுதே கோட்டி கொள்ளுதே.
3. வஞ்ச வையகம் பகைக்குதே மாங்கிஷத் திச்சை வாதை செய்வதால் மனமெல்லாந் திகைக்குதே அஞ்சலஞ்சல் காவென் றுனைப் பஞ்சரித்துக் கெஞ்சுகின்றேன் ஆச்சரியமாக வந்துன் காட்சி தந்தனுக் கிரகிப்பாய்.
4. ஆதிதந்த மாவிசித்திரமே தவீது வங்கிஷ ஆண்டவா கிறிஸ்துக் கிருபா சமுத்திரமே, வேதநாயகன் பதங்கொண் டாதரித் தெனையெந்நாளும் மிக்க சொற்பிரவைக் கண்ணோக்கும் பக்கிஷக் கிருபைக் குள்ளாக்கும்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal