யேசு நாயனே நீர்
yesu naayanae neer
யேசு நாயனே நீர் செய்த கிருபைக் குமக் கென்றைக்குந் தோத்திரமையா.
மாசில்லாத மெஞ்ஞான தேவ திரித்துவ ஜோதி மைந்தனடியவர் சிந்தை மகிழ மிகுந்த பலனருள் சுந்திர மிகுகிறிஸ்
1. ஒன்று மிலாதவக் காலமே இந்த உலகைப் படைத்தது நற் சீலமே மனறினிற் கொண்ட மனுக் கோலமே கொடும் வங்கை யடறு கணங்களிடர்வினை மங்கவுதவிய சங்கை மணனெனும்
2. வஞ்ச அலகையினை வென்றாய் சர்ப்ப மடியத்த ரமிதித்துக் கொன்றாய் அஞ்ச லெனப்பரன் முன்னின்றாய் அதிகவு லாசன் மகிழ்கன நேசன் நெறிமுறை வாசன் மகிமையின் ராஜ னெனவளர்
3. மண்ணிற் பவமனைத்தும் நீக்கியே அன்பர் மனத்தின் இருளை முற்றும் போக்கியே விண்ணிற்கதியதனுள்ளாக்கியே உயர் வெற்றி முடிபுனைக்கர்த்தனருள்மிகு சத்தியசபை தொழு நித்திய குருவெனும்.
4. ஞான நன்மைகள் யாவுந்தந்தாய் வேத நாயகன் பாடலுக்கு வந்தாய் மானிடர்க் காய் வந்து பிறந்தாய் சொல மாற்றமிலதுறு தோற்றநரர்களின் ஆற்றும் நியம வீடேற்றமெனவுயர்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal