யேசு கிறிஸ்து நாதர்
yesu kiristhu naadhar
யேசு கிறிஸ்து நாதர் வென்று உயிர்த் தெழுந்தாரா தி சர்ப்பத்தைக் கொன்று
நேசப் பரத்தின் மிக்க நீதிச் செயல் கதிக்க நேரு மூன்றாந் தினத்திலேருசலேம் பட்டணத்தில் நிரலுறும் ஞானக் கதிரொளி வதனச் சுரரிரு வானவர்கள் வரக் கல்லறை நிலை தப்பி விழவுங் காதகர் திடனே மலையப்ப ரெனுஞ்சம் பேதுருவுடனே நெஞ்சக மிஞ்ச விறைஞ்சியும் நின்றிட விஞ்சையரஞ்சல் செயஞ் செயமென்றிட
தாந்தாந்தக செந்தரி கிடதரி திரிந்தார தில்லானா திரி திரி தந்திரி திரி தானாதிரி நாதிரி தகதின்னா திரி தில்லானா திரி வதனி தாந்தனி தாந்திர தாதரி தகதரி கிடதக தில்லானா திரி தகதின்னா திரிதானா தந்திரி. - யேசு
1. அப்போஸ்தலர்க்குக் காட்சி கொடுத்தார் கிருபையாகப் பரமதி சினேகப் பிரவை மிக (அப்போ) முனம் அடர்ந்து மறை தொடர்ந்து மனுவுருவென நடந்து வழிக் கடந்து சிறந் தெழிலாய் (அப்போ) மகதல்லா மரியடி பற்றிட விரசா யுல்லாசம தொடு கிட்டவுமவள் பாற் சல்லாப மதுரை யிட்ட திவளமைகள் வல்லாமைகள் சொல மெய்த்துளமகிழவே (அப்போ) தேவ வருமைத் திருவாக்கினறிவுயர் மறுமொழி யறையப் புக னோக்கி னுடல் புளகமதுற உரிமைத் தவமுனிவர்கள் பயமொடு கதவு கடனை யடை பட வொளி யக்கிரக மதிடை சடுதியினடு வினிலதிசய மொடுவர பெருமைப் பரனாகக் கன மகிமைகள் மிகு புதுமைகள் செயவே பிரியத்து டனடி பணியவுமுது மறைகளிலுரை சொலியே (அப்போ) மிகவே யாக மதிடை சந்தேகமதுறு பனிருவரி லொருவர் சந் தோமையருடனேர் மைகளாக விரலொடு கையை யெனின் விலாவதிலிடுவாய் அவ்விசுவாச மதகலென வுரைசொல குலாவியும வனோ அரிய பராபரனெனவு மர்ச்சனை செய ஆசைக்கித மித்தனு தினம் நலமே பேசிப் பினுமைக் கடலுறு தலமே
சக்கிய விணக்க சலக்கரணைக்கட லக்கண மிக்க செயற்கள் விளக்கமு றக்கன லிற்கறிவைக் கருசிக்கவ னுக்கிரகமுக்கிய பக்கிஷமளிக்கவே (அப்போ)
மறு உரு வாகப் பரமவடி வெடுத்தார் மெய்ப்பாய்த் தெரிசனை பத்திப்பான்மையாயளித்த வேதநாயகன் பதமோத மனங்களித்த மேசியா நசராதிபன் கிறிஸ் தாசில்லா மனுவேலி ரட்சகன் வித்தகன் பரிசுத்த திரித்துவ கர்த்தனெங்கள் மகத்துவ தேவன் - தாந் - யேசு
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal