விந்தையாக வந்த மேசையாவே
vindhaiyaaga vandha mesaiyaavae
விந்தையாக வந்த மேசையாவே உந்தன் மீதிலாசை கொண்டேனேசையாவே
தந்தை மனுடர்கணிற் பந்தமகலத் தந்த தாவீதரசன் றொழுந் தேவ திருக்குமாரா - விந்
1.உலக மயக்கத் தினிலடுத் தேனே யெனக் குற்ற நாளெல்லாம் வீண்விடுத்தேனே நிலை கெடாதெனைக் கண்பாரு மிகுமுதாரி நீயே யென்னுபகாரி நீயே கிருபைவாரி. - விந்
2. பேயுலகுடல் மூன்றும் பகை செய்யுதே யென்மேற் பெலக்க அக்கினிஅம்புகளை யெய்யுதே நேய மிகுந்த வெனதாற்றும் மணவாளனே நித்த முனதிரக்கம் வைத்தாள் கிருபையாளனே - விந்
3. கொடிய தீவினைக் கெந்தனைக் காருந்தேவ கோபஞ் சாபமனைத்தையுந் தீரும் அடலுக்கஞ்சிக் கெஞ்சிப் பஞ்சரிக்கு தென் னெஞ்சம் அஞ்சல் செய்யுமுமக்கபைய மபையந் தஞ்சம் - விந்
4. தங்கு கிருபையினுத்தம நேசா வானோர் சங்கம் கனஞ்செய்யும் சங்கையின் ராசா துங்க இசறாவேலர் வங்கிஷப் பிரவடீகா துலங்கு தெய்வ சொரூபா மிலங்கு மற்புதவாகா - விந்
5. சாதியனைத்து முய்யவரும் நீதா எங்கள் சருவ சீவ தயாபர நாதா வேதநாயகன்றன் பதத்தைக் கேட்டிம் மாத்திரம் மேன்மை செய்யும் எந்த நாளுமுமக்கிஸ் தோத்திரம் - விந்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal