வந்திடுவார் இயேசு
vandhiduvaar yesu
வந்திடுவார் இயேசு வருவேன் என்றுரைத்தவ வாக்கு மாறார் வந்திடுவார் இயேசு
வானில் எக்காளம் தொனிக்கும் வானவர் வருகை இருக்கும் ஆ ஆ ஆ வல்லமையாம் தேவ மகிமையில் நாமே வானவரை மணம் செய்திடுவோமே
திருடனைப்போல் வருவாரே நம்மை விழித்திருக்கச் சொன்னாரே ஆ-ஆ ஆ ஆயத்தமாய் என்றும் காத்திருப்பீரே ஆண்டவரில் களிகூர்ந்திடுவீரே
சஞ்சலம் யாவும் நீங்குமே - மெய் சந்தோஷம் மகிழ்ச்சி பொங்குமே ஆ-ஆ-ஆ சாட்சி சுவிசேஷம் காட்சி அளிக்கும் ஆட்சி செய்ய அவர் வந்திடுவாரே
ஆயிர வருஷ ஆட்சியில் ஆளுகை செய்திடுவோமே ஆ-ஆ-ஆ அகிலத்தின் அதிபதிகளை நாமே நீதியாய் நியாயந் தீர்த்திடுவோமே
பூமியில் உறங்கிடும் சுத்தர் முதலில் உயிர்த்தெழுந்திடுவாரே-ஆ-ஆ-ஆ மரிக்காதவர் மறுரூபமடைவோம் மன்னன் இயேசுவோடு மங்களங் கொள்வோம்
காளையும் பாலசிங்கமும் கன்றும் கூடி ஒருமித்து வாழும்-ஆ-ஆ-ஆ சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும் சிறு பிள்ளை விரியன் புற்றில் விளையாடும்
இரத்தத்தில் முழ்கிடுவீரே-தேவ சத்தத்தைக் கேட்டிடுவீரே-ஆ-ஆ-ஆ ரட்சிப்பினுள் நீரே வந்திடுவீரே சிட்சைக்கு உண்மையாய் தப்பிடுவீரே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal