வந்தவ ராரையா யிங்கே
vandhava raaraiyaa yingae
வந்தவ ராரையா யிங்கே வந்தவ ராரையா.
சுந்தரப் பரன் சொருபமாய் பரி சுத்தமொடு பெத்தலையிலுற்ற குடிலுக் குள்ளே.
1.தேவனு மனுடனுமாய்த் தஞ் சிந்தையின் மகிழ்ந்து மாட்டு விந்தைத் தொழுவத்திலே.
2. தூதர்க ளதிபதியோ தீர்க்கர் சொன்னபடி யுன்னதமாய் முன்னணையிலே படுக்க.
3. வானவரடி தொழவே வெல்லை மந்தையாவின் பந்தி யூடு கந்தைத் துணியைப் போர்த்து.
4. மாதனை மரியிடமே சுய வல்லமை சற்றில்லவர் போற் புல்லினிற் கிடத்தி வைக்க.
5. ஆயர்கள் கூடி வரவொரு அன்னை மரி தன்னிடத்திற் சின்னவடி வெடுத்து.
6. இயேசுக் கிறிஸ்தெனவே யுலக இரட்சகர் நந்தட் சகரென் றுச்சித நாமத்தைக் கொண்டு.
7. அற்புத வதிசயமோ பர னாட்டுக் குட்டிப் போலிருக்குது மாட்டுக் கொட்டிலுக் குள்ளே.
8. பரமனுக்கு மனுஷருக்கும் பிணைப் பட்டு நடுப்பட்டு வினைப் பட்டுப் பரதபிக்க.
9. சர்ப்பத்தின் றலையுடைக்க வேத சத்திய மகத்து வத்தி னித்திய மத்திஸ்த னென்று.
10. பராபரனொரு மகனோ கெட்ட பாவிகளை யாவலுடன் பூவிலெங்குந் தேடிக் கொண்டு.
11. வேதநாயகன் றமிழ்க்கே பிர மிக்க மனமெய்க்க வொரு மிக்கக் கிருபை கொண்டு.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal