வந்தனம் வந்தன
vandhanam vandhana
வந்தனம் வந்தன மெந்தை பராபரன் மைந்தனெம் சுதனே
சந்ததம் சந்ததமார்த்தனங் கோவே அனந்த அனந்த சங்கீர்த்தனம் தேவே.
1.தந்தையதம் செய்யகந்தை யறும்படி வந்து பூதலமே நிந்தையுடன் கொலைப்பட்டு மடிந்தார் உந்து தினம் திரியத்தி லெழுந்தார். - வந்
2. தேவபரன் சுதன் மானிடர் பாதகம் தீரவே பெலியாய் சீவனை விட்டடக் குண்ட மூன்றாம் நாள் செங்கதி ரென்ன உயிர்த் தெழுந்தாரே. - வந்
3. ஆதித்த வாரத்தில் பூமியதிர்த்தல தாயதிர்ந்திடவே சோதிப் பிரவையாகக் கிறிஸ்து உயிர்த்தார் பூத பசாசைத் துணித்து செயித்தார். - வந்
4. மிக்க பராபரன் தூதன் ஒரு தன்விண் மேலிருந்துலகில் மின்னலைப் போலுருவ முன்னவெழுந்தான் மின்னுமுடை வெண்மையென்ன அணிந்தான். - வந்
5. கல்லறை வாயிடை மூடியிருந்த கனத்த கல்பிரட்டி அல்ல லற்றங்கதின் மீது ளுக்கார்ந்தான் புல்லர் பயந்து விழச்சுரன் சேர்ந்தான். - வந்
6. விம்மி விம்மிச் சில மாதர் துயருற மேவி நிற்கவுமே எம்மிறைவன் முதலே யெழுந்தானே என்று சம்மனசு தான் மொழிந்தானே. - வந்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal