வந்தாரையா சாஸ்திரிமார்கள்
vandhaaraiyaa saasthirimaargal
வந்தாரையா சாஸ்திரிமார்கள் வந்தாரையா யேசுவைக் காண வந்தாரையா.
அந்தரம் பரமும் பூச்சக்கரமும் யாவும் ஆறு தினத்தமைத்த மாறில்லாத கர்த்தன் விந்தை யுடனிரங்கித் தந்த சுதனைக் காண மேவி யெருசலைக்குச் சாவிச் சாஸ்திரி மார்கள் - வந்
1.ஐயனாதி மாந்தர் செய்யும் வினையகல அன்னை மரியுதரந் தன்னி லவதரித்துத் துய்ய மனுவுருவாய் வையந்தனி லெரோதே துலங்க ஆளும் நாளில் நலங்கொள் யூதேயாவிற் சூட்டியபடியே பெத்தலேகே மாட்டுக் கொட்டிலிலே பிறந்தபோது பொய்யனான பேயும் தொய்யப் பரமண்டலம் புக்குஞ் சேனைகளும் மெய்கும் புகளுரைக்க நையும் பாவங்களும் நொய்யும்படி யுலைய நட்சத்திரம தொன்றங்குச் சந்தனி லுதிக்க நாற்றிசை யோரும் மிடையர்களும் போற்றி செய்திடவும் கிழக்கதினின் றுய்யும்படி யெருசலையினதி பனுக்கும் ஓத அவனும் விண்ட போதப்படி முன் கண்ட மையவுடு வினொளி வையுங்கண்டு சென்று வணங்கித் தெட்டணைகள் வைத்திணங்கிப்பதம் பணிய - வந்
2. எங்கு செனனம் யூதர் துங்க னெனவுங் கேட்க எருசலே மியரும் வெருவியே மருளப் பங்கமா யெரோதே யுங்கலங்கி வேத பாரகரையுங் குருமார் களனைவரையும் பரிவுடன் கூட்டிக் கிறிஸ்துற்பத்தி தெரிவுடன் காட்டித் தருக வெனச் சங்க முழுதும களங்கள் யூதேயாவைச் சார்ந்த பெத்தலேகே மோர்ந்து வருவாரென மங்களம் பலவிதங்களா யெழுதி வகுத்த தெரிசிகளும் தொகுத்ததிர மிதென்று வாசக மோதச் சாஸ்திரிகளை நேசமதாக இரகசியத்தில் புங்கமாய் அழைத்தினங்க ளோதி நீங்கள் போயங்கணுகி யெனக் காயிங் கெய்துமென வங்கையரசன் சொலத் தங்கு முன்னணைக்குள் மகிழ்ந்து சென்றி றையைப் புகழ்ந் தர்ச்னைபுரிய - வந்
3. திட்டமுட னெரோதே யிட்ட மொழிப்படிக்குச் சென்ற காலையில் முன்னின்ற தாரகையுஞ் சட்டமாய்த் துலங்கி மெட்ட தாய் குழந்தை தங்குந்தலம் வரைக்குந் துங்கமாய் நடந்து தரித்த தைக்கண்டு சாஸ்திரிகளும் கருத்தினிற்கொண்டு மாட்டகத்திற் கிட்டியதி பனையு நெஷ்டையுடனு ணர்ந்து கேண்மையாயி றைஞ்சித் தாழ்மையாகத் தங்கள் பொட்டணங்கள் திறந்திஷ்டமாக வைத்த பொன்னுந் தூபமிறா வென்னுங் காணிக்கைகள் போதவுங் கொடுக்க மறுக வொரு பாதை யங்கடுக்கப் பரனவர்க்கு விட்ட தெரிசனத்தைத் தொட்டுப் பதமுரைத்த வேதநாயகனி னேத மகலச் செய்து மட்டிலாப் பலனும் தட்டிலாமலிந்த மனுவேல் தயவை யனுதி னமுந்தினமுஞ் சொல்ல - வந்
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal