வையகமே நீ வார்த்தையை
vaiyagamae nee vaarthaiyai
வையகமே நீ வார்த்தையைக் கேளாய் மெய்யாகவே நீ இரட்சிப்பை அடைவாய் வையகம் தரா இன்பம் வல்லவர் தருவாரே எல்லா நாளும் அவரில் மகிழ்வாய்
இயேசுவைப் போல தேவனுமில்லையே அவரல்லாமல் இரட்சிப்பு இல்லையே குற்றமற்ற அவர் இரத்தம் நீக்கிடுமே உன்குற்றம் குருபரனின் வார்த்தை அறிவாயே
மாயை உலக வாழ்வையும் நம்பாதே மனுஷ ஞான செயலை நம்பாதே மனுவரிலே இயேசு மகத்வமானவரே அவர் நாமமே நமக்கடைக்கலமே
மறுபடியும் நீ பிறக்கவேணுமே மன நிலையிலே மாறுதல் வேண்டுமே ஆவியினால் பிறந்து தேவனையே அறிந்து ஜீவ பாதையில் சென்று மகிழ்வாயே
ஆதாம் ஏவைபோல் அசட்டை பண்ணாதே திதாம் உலக வாழ்வையும் நம்பாதே உலகம் ஒரு நாளில் உன்னையும் கைவிடுமே அந்நாளில் நீயும் ஏங்கி தவிப்பாயே
கடைசி காலம் நெருங்கி வருதே கர்த்தரின் வருகை சமீபமாகுதே நியாயம் தீர்க்க வாராரே நியாயாதிபதி இயேசு அநியாயம் செய்வோரை அழிப்பாரே
More from Perinba Geethangal
- அக்கினி அபிஷேகம் அக்கினிakkini abishegam akkiniSis. Violet Aaron · Perinba Geethangal
- அடைக்கலமே இயேசுவின் நாமம்adaikkalamae yesuvin naamamSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயமே நம் ஆண்டவர்adhisayamae nam aandavarSis. Violet Aaron · Perinba Geethangal
- அதிசயம் அதிசயம் அதிசயம்adhisayam adhisayam adhisayamSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பரின் அன்புanbarin anbuSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவான மெய்anbae uruvaana meySis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பே உருவானவரேanbae uruvaanavaraeSis. Violet Aaron · Perinba Geethangal
- அன்பை நாடுவோம் ஆதிமெய் அன்புanbai naaduvom aadhimey anbuSis. Violet Aaron · Perinba Geethangal