வானோர் பாடுஞ் சேயோவா
vaanor paadugn seyovaa
வானோர் பாடுஞ் சேயோவா மகிமைப்பிரதாபா வாதுணைக்கு
கானானாட்டுக் கரசதிகாரா கோனார் சேட்டக் குமாரா எனக்கு
1.காலா காலத்தரிய கிருபையே கடிவினை கெடவந்தாயே நரர் கோலத்தேயொளிர் தேவாதிசேயே சாலத்தயவுசெய் நீயே எனக்கு
2. மைந்தர்க்குறவான அதிசய சமத்தே தாவீதின் வங்கிஷத்தே வரு சுந்தரத் தொருகனி யாஸ்திரி வித்தே யெந்தைக் குறை கரிசித்தே எனக்கு
3. அடியேன் மிடியாரிடஞ் சென்று சொல்லவோ அருமை ரட்சக நீ அலவோ பொரு கடிமுடி பட மரித்துயிர்த்தெழும் வலவா கணவனே சலாம் தலைவா எனக்கு
4. வானச் சிங்காரா மகத்துவச் சொரூபா வந்தென் னிடத்திங்கி ருவா திவ்ய ஞான போசனத் துருவா அருவா மேன்மைக் கிருபாசனத் தொருவா எனக்கு
5. வெற்றித் தான மோக்கிஷ வழிகாட்டே வேதநாயகன் பாட்டே அடி பற்றித் தான் தொழ உவந்து கொண்டாட்டே பரிந்து பேசும் மன்றாட்டே எனக்கு
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal