வானத்தனாரே மெஞ் ஞானத்தனாரே
vaanathanaarae megn gnaanathanaarae
வானத்தனாரே மெஞ் ஞானத்தனாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே
கானகத்திலே வந்த மேன்மைச் சிங்கேறே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான
1. மாறாக் கருணையாரே வலிய வந்தாரே மாட்டுக் கொட்டிற் பிறந்தாரே ஐயா பேறு தந்தாரே பெத்லே மூராரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான
2. வாக்குத் தத்தத்தாரே வல்லபத்தாரே வானத்தினின்று வந்தாரே மா பாக்கியத்தாரே பக்கிஷத் தாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான
3. ஆட்டுக் குட்டியாரே ஆனந்தத்தாரே காட்டுக்குளே பிறந்தாரே வந்து மீட்டுக் கொண்டாரே வேடிக்கையாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான
4. அந்த நற்கோனாரே ஆதித் கோனாரே கந்தைத் துணியைக் கொண்டாரே பல விந்தைக் கோனாரே வேதக் கோனாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான
5. நல்ல மெய்க் கத்தாவே ஞானப்பத்தாவே வல்லமைத் தேவாதி தேவே ஓகோ துல்லிபக் கோவே தோத்திரப் பிதாவே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான
6. ஆகமத்துரையாரே அன்புவைத்தாரே சோகு சர்ப்ப மிதித்தாரே ஓகோ ஏசு வஸ்தாரே யிஸ்திரி வித்தாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே - வான
7. சாதியை மீட்டாரே தள்ளமாட்டாரே வேதநாயகன் பாட்டாரே ஓகோ பேதைக் காட்டாரே பேதங் காட்டாரே சீயோன் மானுக்கம் மானத்தனாரே. - வான
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal