வானாதி வானவர் வான் புவி போற்றும்
vaanaadhi vaanavar vaan puvi potrum
வானாதி வானவர் வான் புவி போற்றும் இயேசு பிறந்தாரே விண்ணகம் விட்டு அதிசயமாக மண்ணில் உதித்தாரே பிறந்தாரே உலகில் இயேசு பிறந்தாரே உதித்தாரே உன்னதர் மண்ணில் உதித்தாரே கொண்டாட்டமே உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே ஆனந்தமே மனுக்குல வாழ்வில் ஆனந்தமே
இருளில் வாழுகின்ற மாந்தரை மீட்டிடவே ஒளியானவர் இயேசு உலகின் ஒளியாய் உதித்தாரே பாவத்தில் மாளுகின்ற தம் ஜனங்களின் பாவங்களை நீக்கி ரட்சிக்கவே இயேசு இரட்சகர் பிறந்தாரே -
ஏழைப் பங்காளனாய் எளியோரின் ஆண்டவராய் மாட்டுத் தொழுவத்திலே மன்னன் இயேசு உதித்தாரே மண்ணான மானிடர்க்கு பொன்னான வாழ்வுதர விண்ணாளும் வேந்தனவர் புவியில் பிறந்தாரே
பாலகன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவம் என்றும் அவர் தோளின் மேலிருக்கும் அவர் நாமம் அதிசயமாம் அவர் ஆலோசனை கர்த்தராம் வல்லவர் நித்திய பிதா சமாதானப் பிரபுவே
More from Endhan Ullam Yesuvukae
- அக்கினி நாவுகள் என்akkini naavugal enEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்புள்ள ஐயாமாரே அருமையானanbulla aiyaamaarae arumaiyaanaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பே அன்பே அன்பே என் இதயத்தின் நேசரேanbae anbae anbae en idhayathin nesaraeEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அன்பேதான் உருவானவர்anbedhaan uruvaanavarEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அம்மாவும் நீர்தானையாammaavum neerdhaanaiyaaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- அழகாக பொடிவ கட்டிazhagaaga podiva kattiEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆச எனக்கொரு ஆசaasa enakkoru aasaEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae
- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்aattam paattam kondaattamdhaanEvg. Sam Haridoss · Endhan Ullam Yesuvukae