வானாதி தேவ மைந்தனை
vaanaadhi deva maindhanai
வானாதி தேவ மைந்தனைப் போற்றுவமே
கோனான்றவிதிறை கோத்திரத்தினரர் கோலமதாய் பிறந்தார். - வானாதி
1.காவினிலே அதமேவை தின்ற கனி காரணத்தா லியல்பாய்த் தேவனுமே யேழை ரூபமதா யெமைத் தேடிவந்தே பிறந்தார்.
2. நீதியினாடையினாலெமை மூடி நிறைந்தின்றலங்கரிக்க மாதயவாய்ப் பழங் கந்தை பொதிந்திட மாட்டகத்தே பிறந்தார்.
3. வல்ல வரசரமைச் சராண்மனை மாளிகை யானதிலும் புல்லணையே மிக மேன்மை யென் றெண்ணிப் பிறந்ததிசயமே
4. சுந்தரமிலங்க பரஞ்சி யணிந்த துலங்கு மஞ்சந்தனிலே வந்து துதியாமல் விலங்கடர்ந்த வனந்தனிலே பிறந்தார்.
5. அண்ட புவன மடங்கலு முண்டு செய் தங்குலியிற் சுமந்தோன் மண்டல மெண்டிசையு மடங்கானோர் மதலையாக வந்தார்.
6. பெத்தலேகே மினி னித்திய திரித்துவ கத்தன் வந்தாரெனவே யத்தியந்த பய பத்தி மிகுந்தா காயத்திலும் பர் பணிந்தார்.
7. வெற் பருகாயர் பரப் பொருள் சேயெனயுற்பனமாய்த் தொழவே யற்புதமாய் மரி கெர்ப்ப மதுற் பவித்தற் புதனார் பிறந்தார்.
8. சாஸ்திரி மார்கள் விச்சேத்திரமாய் வந்து தோத்திரமே புரிய சூத்திரமான பரன் சுதனார் யூதர் கோத்திரத்திற் பிறந்தார்.
9. வேதநாயகனோது பாவின் மேவி யனுக்கிரகஞ் செய் சோதியான் மகனேசு நாத சுவாமியைத் தோத்தரிப்போம்.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal