வாகனங் கொண்டாரே
vaaganang kondaarae
வாகனங் கொண்டாரே ஆதியானந்தா வைய நரருய்ய வருள் பெய்யவோர் துய்ய கேரூபின்.
மாகன மேன்மையாக ஏகனொரு தெய்வீக வானிலுயர் சிநேக ஞானமெய் மனுஷீக மாசறு மபிஷேக தேசுறுஞ் சுபதேக மாமறை வீதியூக சாமியுமே பூலோக மண்டலம் யாவும் வாழ்க மதவெறி கொண்ட பிசாசு தாழ்க சதாசிவ மங்களாஞ்சுகள் பாட எங்கள் வாஞ்சைகள் நீட வளமிகு மாதவ ரோதி வழுத்திய நீதிப் பிரகாரம் தன துளமகிழ் தாவீதாதி மகத்துவ சோதித்திர வதாரங் கொடு மனுடர் கணேந்திர பர்த்தா வாயொரு கனிவினை தீர்த்தருள் கர்த்தா வாயிரு மறியின் மேவிய தந்தைச் சொரூபன் நெறியுலாவிய விந்தைக் கேரூபின் - வாகனம்
1.சுந்தர சவுந்தர சுயாதி பத்திய ராசன் அந்தர மகண்டபரி பூரண விலாசன் மந்திர ஜெபங்களின் மகத்துவப் பிரகாசன் தந்தையர் பரம்பர தயாபர சருவேசன் சுயம்பனாதி யொன்றான சயம்பெலன் திறம் ஞானம் துத்திய மிகுத்த கருணை வாரி நயந்தருந் தேவநீதி பயங்கரமான சோதி நன்மைப் பரம உபகாரி மயங்கொள ருபாரூபி வயங்கு சத்தியப் பிரதாபி மாறாத வஸ்தொர சரீரி புயங் கொள் பராக்கிரமத் தோ வியங் கொள் சக்கராதி பத்திய பூரண கடாட் சவதிகாரி சூட்டி விட்ட னேகம் வானோர் கூட்டமும் பரம் புவியும் தோன்றும் பொருளும் படைத்தானே வாட்ட மற்றறு தினத்தில் நாட்ட முற்றிருக்க வென்று மண்ணினால் அதத்தை யெடுத்தானே யீட்ட மாயவன் விலாவில் பூட்டிய அஸ்தி யொன் றெடுத் திஸ்திரியைச் செய்து கொடுத்தானே மேட்டி மையதாய்ச் சிங்காரத் தோட்டமொன்று போட்டிரண்டு, விருட்சத்தை நாட்டியடுத் தானே துய்ய பரிசுத்தத்தினை யன் விலக்ககத்தி னையுங் கனி தின்றத்தின் மை யும் வலு சர்ப் பத்தின் கொடிய சோதனை செய்யவு மேலே முடிய மாதெனு மேவையினாலே தொடர்ந்த கடிவினை உல கெங்கு மூடியே அடர்ந்த மரணமும் நரர் பங்கினீடியே சுற்றிய பா வத்துயரா நித்திய காலத்திலுமே பற்றியே வத்துடகோ பத்த முன் மூழ்கத்திடமே சூழ்ந்த சஞ்சல மோய்ந்த ழிந்து முன் வீழ்ந்த மைந்தர்கள் வாழ்ந் தெழும்படி சூதாக மங்களற வேதாக மங்களுட நாதா மகிழ்ந்துமரி மாதா வினுந்தி யிடை துங்க மிலங்க பிரா மின் வங்கிஷ சங்கை மிகுந்த வி தோங்கலன் புற விங்கித லங்கிருத பாங்குடன் செய மங்கள மெங்கனு மோங்க வுங்கன துரித மொடெருசலை அரசென முர செழ வரு மரியின ரொரு பரம கேரூ பின் முகில் - வாக
2. மண்டல மெலாம் புகழு மன்னவன் றவிது கண்டபடி ராஜகுல கன்னி மரிமாது தொண்டு செய வேகடவுள் சொன்னது பொய்யாது பண்டு வினை தீர மறை பன்னிருவரோது வாசகப்படி யூதேயா தேசமதிலே பெத்தலேம் மாநகர் வனத்திடை வந்தானே ஆசதில்லான் பாவிகண் மேல் நேசமாய் முன்னணை யினில் ஆவடை கொட்டிற் குட் பிறந்தானே தேசுறும் வானோர் களெல்லாம் ஓசையாய் கீதங்கள் பாடி சேணடைந்து ரைக்க மகிழ்ந்தானே பாசமாய் முல்லைத் தலைவர் ஆசையோடிரவில் வந்து பாத மலர் காண உவந்தானே மாற்ற மற்றுக் கிழக்கதில் தோற்றிய நட்சத்திரங் கண்டு சாஸ்திரிகள் வந்திக்க வந்தாரே போற்றியே பொந்தூப மிறை யாற்றிய முக்காணிக் கைகள் தேற்றமாகச் சந்திக்கத் தந்தாரே சீற்றமா யெரோ தே கொடுங்கூற்றமாய் அவன் சனமும் வேற்றுமை பொருந்தி யிருந்தாரே நாற்றமா முலக வாழ்வை யேற்றமா யெண்ணிக் கொண்டொரு ஆற்றுமத்தின் வாழ்வை மறந்தாரே வையம் புரக்க வந்த ஐயன் குருதி சிந்த நொய்யுஞ் சுன்னத் தடைந்த மெய்யுந் தெரியமுந்த வளமை யாலைய மங்கன மோங்கி வலிமையாகவு நன்புகழ் தாங்கி மகிழ்ந்து சிமியோனங் கோடி வந்து கூடியே மிகுந்த வயதினன்னாளும் வந்துபாடியே மங்களமாய் இங்கிதமாய் நன்குறுமா சங்கிதரா கங்களினாலுங் கனமாயங்கவரோ துங்கலையோ வாழ்த்துறும் பல கீர்த்தனம் படு தோத்திரங் களை யேர்த்து வந்தருள் வாரி மகத்துவ சரீரீ பரத்தினா தாரி செகத்தினுதாரி பிரதா னாசாரி வஸ் தொரு நித்திய பூர்த்தியாரண துத்திய மகத்துவ கீர்த்தி காரண பத்தர்கள் முத்தர்க ணேத்திரமாகிய சத்திய கிறிஸ் தென வேற்ற மேவிய மறைதுறை நெறிமுறை குறையற நிறைவுற வெறிசிறை பெறுகுறி பொறை செறி இறையவர் - வாக
3. சங்கையுங் கனங்களும் பெலன்களும் விளங்க சங்க வான வரங்கமான தளங்களு முழங்கப் பங்கமோ டெழுங்கண மடங்கலும் நடுங்க பஞ்ச பாதகங்களும் நரகங்களு மொடுங்கச் சட்டமாய்ப் பன்னிரண்டாண்டில் இஷ்டமாய் தேவாலயத்தில் சாஸ்திரி களோடு தற்கித்தானே திட்டமாய் யோர்தானதியில் சிஷ்டகன் யோவானிடத்தில் தீட்சை முப்பதாண்டினிற் பெற்றானே துட்டலகை யானதுகள் கிட்டியே வனாந்திரத்தில் சோதனை செய்ததுஞ் செயித்தானே அட்டதிசை யெங்கனும் போய் மட்டிலாப் புதுமை செய்து அற்புத சுவிசேஷம் விதித்தானே தாரணியில் பன்னிரு குரு மார்களையப் போஸ்தலரென சாட்சியாகக் கட்டளை யிட்டானே பாருலகின் பாவமெல்லாம் தீரவே யாற்றும சரீர பாடுகளனைத்தையும் பட்டானே வாரினால் பிலாத்துவின் முன் கோரமாயடிக்கப்பட்டு வாதை முண்முடி யதுந் தொட்டானே மேரெனுங் கொல் கதாவினில் பாரமாங் குருசிலேற்ற வீரமாக ஜீவனை விட்டானே சங்கை பிரேதலங்காரம் துங்கப் போளச் சிங்காரம் அங்கோர் சுக்கிர வாரம் நங்காய்த் திட்டப் பிரகாரம் தரவே கல்லறை யானது சார்ந்து இருபேர் நல்லறி வாளர்க டேர்ந்து சடம் வைத்துக் கண் மூடிப் போனதற் கப்புறமே திடமுற்றுச் சொன்னீடித் தான் விசித்திரத் தரமே தங்கு பாதலங்களுடி றங்கியாதியின் குமாரா தங்கள் சேனை பொங்கு வானிலங்கி வாழ்கவுங் கிருபையாக
தாண்டிவன் சிறை மீண்டெழுந்தருள் பூண்டுயர்ந் தெமை யாண்ட நாயகர் சாபங்களும் பரம கோபங்களுந்திகிலும் பாவங்களும் படுபர தாபங்களுந் தொலைய சத்துரு சற்பனை வாதடி யோடற வெற்றி மிகுத்த மராடி மெய் மாமறை முற்று முடித்த வராய் வளமேவிய நித்திய மகத்துவ ராஜ சிமேரென சய பிரவை க ளொளிர் மயசுரர் தொழ நரர் தயவருள் குருபர ஜெய ஜெய ஜெய வென - வாக
4. பாடுற மரித்தடக்கப் பட்டாதித்த வாரம் நீடு முதையத்தின் முன்னிருக்கு மந்த நேரம் பீடுற வெழுந்த பிரஸ் தாப அதி வீரம் சீடருக்குக் காட்சி தந்த திவ்விய விஸ்தாரம் பாருல கதிர்த்தலாக வீரியச் சுரரிருவர் பரத்திலிருந்து வந்த சீலம் சீருடன் கல்லறை காத்த காரியச் சேவகரெல்லாம் செத்தவர் போலே விழுந்த கோலம் போரிடும் பசாசை வென்று நேருடன் பிரஸ்தாப மாகப் பூபதி கொண்ட செயத்தனு கூலம் சூரிய பிரகாசமாக ஆரிய னெழுந்த மேன்மை தோற்றுதற் கானந்த விசாலம் பத்து விசைபல விடத்துத்தம தெரிசனைதம் பத்தர் கட்கலொம் பகுத்தானே சித்தமாக நாற்பதுநா ளித்தரையிலே யிருந்து திவ்விய பிரசன்னம் மிகுத்தானே சுத்தசுவி சேடமதை விஸ்தரித்துல கெங்கும் போய் சொல்லுமென்று வேதம் வகுத்தானே பெத்தானியா மட்டும் சென்று முற்றினும் ஐந்நூறு பேர்க்கு பேரின்ப வாழ்வு தொகுத்தானே பம்பைகள் மேளதாளம் உம்பர் குதிதி தெக்காளம் கெம்பித் தெழும் சிம்மாளம் சம்பிரத் தோடண்ட கோளம் படவே உன்னத மானவு லோலம் இடவே பொன்னகர் மேவிய கோலம் பாவாரும் வீணைகள் ஆயகுழல் மூழவே தேவாதி தூதர்கள் கோடி புடை சூழவே பள்ளமுறு கள்ளலகை யுள்ளலறி யெள்ளி விழ வள்ளல்திரு வுள்ள மகிழ் கொள்ள மறையுள்ளபடி பாங்குடன் பரமண்டல மேறி யோங்கியும் புகழ் கொண்டுரை கூறி பாரா பரத்தினோ டோரா சனத்திலே சுராடு திக்கவே நாராள் குதிக்க மலர் பாதமே கதி நீடி மகிழ்ந்தவர் வேதநாயகன் பாடலுகந்தவர் ஆதி கால முனாக இருந்தவர் நீதியாதி பதி யொரு சுந்தரர் படருலக முடிவினடு விட வருபவர் கடவுளு டனுலவ திடமொ டொளி விண்முகில் - வாக
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal