உன்னதப் பரமனின் ஒருமகனே
unnadhap paramanin orumaganae
உன்னதப் பரமனின் ஒருமகனே அரு ளொளி விடு திருமுகனே
பன்னிருபிதாக்களும் முன்னிருமுதாக்களும் மன்னரும் சீஷாக்களும் பரிவுட னடி தொழ எருசலை நகரெழு பர நர குருபர
1.நித்திய அதிசய நேய கிருபையா நெறி நிறை மறை மேசியா சத்திய தயா பர உத்தம குணாகர தத்துவ மனோகர தயவு செய் பரிவு செய் தமியனை யடிமை கொள் சருவ வல்லப பர
2. தந்திர அலகைகள் சதியறவே வரு தருபர கதி பெறவே மந்திர ஜெப தவ சுந்தர அதிநவ வந்தனை செய வருள் மனுடகுமாரனென அனை மரி யிடம் வரு மனு வேலட்சய பர
3. மங்கள சுப சுவி சேட கவி நேயா மகத்துவப் பரம ராயா இங்கிதப் பிரகாசா சங்கையின் சர்வேசா எங்களிதய வாசா இனி நடு விடவரு கன வலமை மகிமை யேசு ஞாயாதி பதி உன்னத
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal