உங்கள் கண்ணீரையும் காண்பவர் இயேசு
ungal kanneeraiyum kaanbavar yesu
உங்கள் கண்ணீரையும் காண்பவர் இயேசு சிந்தும் கண்ணீரையும் துடைப்பவர் இயேசு கலங்கிடத் தேவை இல்லையே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் என்றார் இயேசு உள்ளங்கையில் உன்னை வைத்து காப்பேன் என்றார் இயேசு
ஆகாரின் கண்ணீரை துடைத்தவர் அவர்தானே ஆன்னாளின் கண்ணீரைக் கண்டதும் அவர்தானே ஆகாரின் அன்பு மகன் தாகம் தீர்த்தாரே ஆன்னாளின் கர்ப்பத்தை தேவன் திறந்தாரே உன் மனதின் பாரங்களை இயேசு அறிவாரே உனக்குதவி செய்திடவே உன் இயேசு வருவாரே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
மார்த்தாளின் கண்ணீரை தேவன் கண்டாரே மரியாளின் கண்ணீரில் மனம் உருகி நன்றாரே லாசருவே வா வெளியே என்றே சொன்னாரே மரித்தவனை உயிரோட எழும்பச் செய்தாரே நீ வணங்கும் தேவனவர் சர்வ வல்லவரே நீ அழுதால் மனதுருகும் உன் இயேசு நல்லவரே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
தேற்றிடுவர் இல்லையென்று ஏக்கம் கொள்ளாதே தினந் தோறும் நீ அழுது சோர்ந்து போகாதே ஆதரவு இல்லையென அச்சம் கொள்ளாதே ஆதிசயங்கள் செய்பவரை துச்சமாய் எண்ணாதே காண்பவரும் காப்பவரும் மீட்பரும் அவர்தானே கண்ணீரை களிப்பாக்கும் தெய்வமும் அவர்தானே உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar