அன்பில்லா உலகில்
anbillaa ulagil
அன்பில்லா உலகில் - மனிதன் அன்பைத் தேடுகிறான் - கடல் அலைகள் நடுவினிலே - மன அமைதியைத் தேடுகிறான் நிழலை நிஜமென்று - எண்ணி ஏமாந்து போகின்றான் நிம்மதி இல்லாமல் அவன் எங்கெங்கே ஓடுகிறான்
கட்டிக் கொண்ட கணவனுக்கு - கட்டுப்படும் தாயன்பு பெற்றெடுத்த பிள்ளையையும் பிரிந்து விட துணியும் அன்பு தாயின் அன்பில் சுயநலமிருக்கு தந்தை அன்பில் கர்வம் இருக்கு அப்பா இயேசு கிறிஸ்துவின் அன்பு
அன்பு உருவானவர் ஆறுதல் தருபவர் உனக்குள் இருப்பவர் உண்மையுள்ளவர் மண்ணுயிரை மீட்க தன்னுயிரை கொடுத்த மன்னாதி மன்னன் இயேசு அன்பை மறந்து
கண்களிலே கண்ணீர் வந்தால் - கர்த்தர் இயேசு கலங்கிடுவார் - உன் கண்ணீரைத் தரையின் கீழே சிந்திடவும் விட மாட்டார் உள்ளங்கையில் ஏந்திடுவாரே - மனம் உருகி நின்றிடு வாரே உண்மை அன்பு உலகில் இல்லை உயிர் கொடுத்த இயேசுவில் உண்டு
உலகில் உன்னில் காட்டும் பாசம் வேஷம் என்று தெரிஞ்சுக்கணும் சொந்த பந்த அன்பெல்லாம் கானல் நீர் புரிஞ்சுக்கணும் உள்ளங்ககையில் உன்னை வரைந்து உயிர் கொடுத்தார் தெரிஞ்சுக்கணும் இயேசுவிடம் நிம்மதி உண்டு அன்பு உண்டு நீ வரணும்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பு இயேசுவின் அன்புanbu yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar