உந்தன் பெலத்திலே தேவா எழுந்தருளும்
undhan pelathilae devaa ezhundharulum
உந்தன் பெலத்திலே தேவா எழுந்தருளும் உந்தன் மகத்துவத்தின் மேன்மையுடன் உந்தன் பெலத்திலே தேவா எழுந்தருளும் உயர் பெலத்தினால் எம்மை நிரப்பிடும் – 2
1. சர்வத்தையும் கீழ்ப்படுத்தும் வல்லமை இன்னும் அளிக்க வல்ல நாயகனே சகலமும் செய்தோராய் தைரியமாய் நின்றிட சத்துவம் தாரும் ஐயனே -2
2. மரித்தோரை எழுப்பிடும் மா வல்லமை எங்கள் மத்தியில் நீர் விளங்க செய்வீர் சோரும் மண் சரீரம் உள்ளம் உயிர்த்திட தாரும் நின் அபிஷேகமே – 2
3. மாராவின் நீர் இனிக்க செய்த நீர் சுவை மாற்றினீரே கானாவின் நீர் பாழும் என் குணமும் ஆக்கிட திவ்யமாய் ஆட்கொள்ளும் சக்தியுடனே – 2
4. மெல்கிசேதக் முறைமையிலே வந்த நீர் நித்திய ஆசாரியராய் விளங்குகிறீர் காலை பனி சமம் உம் யௌவன ஜனம் பாரில் நீர் பிறக்க செய்வீர் – 2
5. சாலேமில் ராஜரீகம் செய்குவீர் நீதி ஓங்கிட உம் ராஜ்யமெங்கும் ராஜாக்கள் பிரமிக்க ஜாதிகள் நடுங்க சீயோனை சிறக்கச் செய்வீர் – 2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)