அனலாவி தினந்தோறும்
analaavi thinandhorum
அனலாவி தினந்தோறும் எனையாளவேண்டும் அவியாமல் நிறைவோடு எனை காக்க வேண்டும்
அருள்மாரி நதியாக எனில் பாய்ந்து ஓடும் கனிவோடும் துணிவோடும் பணிசெய்யத் தூண்டும்
தெய்வீக சாயல் எனதாக வேண்டும் - என் நிலையான செல்வம் நீராக வேண்டும் ஆயுள் எல்லாம் நான் கனிதர வேண்டும் - உம் வார்த்தை என் வாழ்வை செழிப்பாக்க வேண்டும்
நித்திய பார்வை நல்நோக்கம் வேண்டும் - என் இதயத்தின் எண்ணங்கள் நீர் காணவேண்டும் பலன்தரும் உம்மீது மனம் ஊன்றவேண்டும் - என் ஆசை பசி தாகம் நீராக வேண்டும்
விசுவாசம் எனக்குள்ளே நிலைத்தோங்க வேண்டும் - என் ஜனமெல்லாம் இயேசுவை பணிந்தாக வேண்டும் வழிவழியாய் வாழ்ந்தும்மை சேவிக்கவேண்டும் - என் தாய்நாடு சிலுவைக்கு சரணாகவேண்டும்
களங்கமில்லாமல் நான் வாழ்ந்திடவேண்டும் - என் காலமெல்லாம் உம் பணிசெய்யவேண்டும் கடமை முடித்தே நான் கண்மூடவேண்டும் - பின் மகிமையில் உம்முகம் தரிசிக்கவேண்டும்
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதின வாழ்க்கையிலேanudhina vaazhkkaiyilaeFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பார்ந்த நெஞ்சங்களேanbaarndha nenjangalaeFMPB (Friends Ministry Prayer Band)