அனுதின வாழ்க்கையிலே
anudhina vaazhkkaiyilae
அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்குப் பயப்படுவோம் நீதியின் தேவன் அவர் அதிசயமானவராம் சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம் நீதியை நிலைப்படுத்தும் தேசத்தைச் சீர்ப்படுத்தும் - 2
கர்த்தரின் பாதைக்கு விலகிய நினிவே நகருக்காய் தேவன் பரிதபித்தார் நினிவே அல்ல தர்ஷீஷ் போன யோனாவை கடலில் வழி மறித்தார் மூன்ற நாள் இரவுமாய் பகலுமாய் மீனுக்குள் கதறியே அழுதவன் நினிவேயின் ஜனங்களும் இராஜாவும் திருந்தவே சுவிசேஷம் அறிவித்தான் தேவ வைராக்கியம் நினிவேயைக் காத்து அல்லவோ - 2
பலிகளைப் பார்க்கிலும் தேவனுக்கே நாம் பணிவது தானே உத்தமமாம் கீழ்ப்படியாத சவுல் என்னும் இராஜா பதவியை அன்று இழந்தானே தாவீது சிறுவனாய் இருந்தாலும் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டான் கோலியாத் பலவானாய் எண்ணப்பட்டும் மாண்டானே ஒரு நொடிப் பொழுதிலே தேவ வைராக்கியம் தாவீது பெற்ற வெற்றியே - 2
யுத்தத்தில் வல்ல கர்த்தரின் நாமம் தரித்தவர் தேவனின் பிள்ளைகளால் ஜாதிகள் திரளாய்ப் பெருகவும் செய்து அவர் முன் களிகூர்ந்து மகிழச் செய்வார் தேசத்தில் சிலைகளே தெய்வமாம் பாவங்கள் பெருகியே அழியுதே பலிகளை விரும்பாத தேவனை அறிந்தவர் ஒரு சிலர் மட்டுமே கர்த்தரே தெய்வம் என்றே நாம் சொல்லுவோம் எலியாபோல் - 2
More from FMPB (Friends Ministry Prayer Band)
- அகிலமெங்கும் செல்ல வாagilamengum sella vaaFMPB (Friends Ministry Prayer Band)
- அதிகாலை நேரம் ஆண்டவர்adhigaalai neram aandavarFMPB (Friends Ministry Prayer Band)
- அந்த அற்புதம் நடந்தக்கதைandha arpudham nadandhakkadhaiFMPB (Friends Ministry Prayer Band)
- அனலாவி தினந்தோறும்analaavi thinandhorumFMPB (Friends Ministry Prayer Band)
- அனுதினம் அவர் பாதம்anudhinam avar paadhamFMPB (Friends Ministry Prayer Band)
- அனைத்தையும் அருளிடும்anaithaiyum arulidumPr. Sam P. Chelladurai · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்னை அன்பிலும் விலைannai anbilum vilaiSis. Saral Navoriji · FMPB (Friends Ministry Prayer Band)
- அன்பார்ந்த நெஞ்சங்களேanbaarndha nenjangalaeFMPB (Friends Ministry Prayer Band)