உலகம் உன்னை பகைக்கலாம்
ulagam unnai pagaikkalaam
உலகம் உன்னை பகைக்கலாம் உறவும் உன்னை வெறுக்கலாம் உன் பெயரைச் சொன்னவர் தான் உந்தன் தேவனே! உயிருள்ள தேவனே - உலகம்
உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் பத்திரமாய் பாதுகாப்பார் எத்தனை தீமைகள் உன் பக்கம் வந்தாலும் சேதம் ஏதுமின்றி காப்பார் ஒன்றுக்கும் உதவாத பிள்ளை என்று என்றைக்கும் போராடும் நெஞ்சம் உண்டு இன்றைக்கும் என்றைக்கும் மாறாதவர் நின்றுன்னை காக்கின்ற தேவன் அவர் - உலகம்
ஆபத்துக் காலத்தில் கூப்பிடும் நேரத்தில் ஆண்டவர் உன்னைத் தேடி வருவார் அஞ்சாதே! அஞ்சாதே! அருகில் நான் உண்டென்று தஞ்சம் தந்து உன்னை காப்பார் ஒன்றுக்கும் குறைவில்லை என் வாழ்விலே என்றைக்கும் பயம் வேண்டாம் என் நெஞ்சிலே - உலகம்
காலங்கள் மாறிடும் கவலைகள் தீர்ந்திடும் கஷ்டங்கள் எல்லாம் பறந்தோடும் சொல்லி அழுதாலும் தீரா மனபாரங்கள் சொல்லாமலே ஓடிப்போகும் நம்மையும் நேசிக்க ஒருவர் உண்டு நம்மை விசாரிக்கும் நண்பனுண்டு என்றைக்கும் இயேசுதான் தஞ்சம் தஞ்சம் அவரைப் போல் எவருண்டு சொல்லு கொஞ்சம் - உலகம்
More from Unakkoruvar Irukkiraar
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவேadaikkalam adaikkalam yesuvaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அண்ணே அண்ணேanne anneEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரத்தின் மேலேathi marathin melaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அத்தி மரம் போலathi maram polaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்னாளம்மா அன்னாளம்மாannaalammaa annaalammaaEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பர் இயேசுவின் அன்புanbar yesuvin anbuEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லா உலகில்anbillaa ulagilEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar
- அன்பில்லாத உலகத்திலேanbillaadha ulagathilaeEvg. S. Gnanasekar · Unakkoruvar Irukkiraar