தூங்கும் போது சொற்பன
thoongum podhu sorpana
தூங்கும் போது சொற்பனங் கண்டனளே இராசர சாள் தூங்கும் போது சொற்பனங் கண்டனளே.
ஓங்கல் பிலாத்து பூங் கொடி மாது ஒளிர் சப் பிர மஞ்சத்தினில் இராசே
1.துங்க விசறாவேற் சங்கையதி யதியைத் துயர மிக வருத்தவும் வங்கையுடள் யூதர் பங்க முறக் கட்டி மனனுக் கொப்புக் கொடுக்கவும் இராசே
2. கற்றூ ணொடு சேர்த்துப் பற்றிச் சேவகரார்த்து கசை கொண்டுற வடிக்கவும் முற்றும் பகை தீர்த்துக் கொற்றவனைப் பார்த்து முண் முடி சிரசிற் சூட்டவும் இராசே.
3. பரபா வோடிறுத்திச் சரியாக நிறுத்திப் பரிகாசங்கள் பண்ணவும் அரசாக ஏற்றி விரசாகப் போற்றி ஆகடியங்கள் பண்ணவும் - இராசே
4. செங்கோற் கொப்பாய் மூங்கிற் கோலைக் கொடுத்து திரு முகத்திலு மியவும் துங்கச் சகலாத்து அங்கியையும் போர்த்து சுவாமிக் கெழிற் சமையவும் இராசே.
5. மன்னனது கண்டு நன்னீரது கொண்டு மலைத்துக் கரம் விளைக்கவும் பின்னும் வசை சாற்றி வன்னச் சட்டை மாற்றி பெருங் கொலைக் கொப்பளிக்கவும் இராசே.
6. சொந்தவஸ்திரஞ் சூட்டிக் கொந்தளித்துக் கூட்டித் தோளிற் சிலுவை யேற்றவும் பந்த முறப் படுத்தி நிந்தையுற நடத்திப் பாதகர் பழி தூற்றவும் இராசே.
7. கோதுறச் சீமோனைப் பாதையிற் பிடித்துக் குருசைச் சுமத்தி வைக்கவும் காதகதர்கள் கெம்ப மாதர்கள் புலம்ப கல்வாரி மலைபுக்கவும் இராசே.
8. கள்ளர் கணடுவில் வள்ளலைக் குருசில் கடினத்துடனறையவும் உள்ளுறு விசன மோரேழு வசனம் உரைத் துயிர் போய் மறையவும் இராசே.
9. காதலனே யுமக்கும் நீதி பரனுக்குங் கவை கருமங்க ளொணாது ஏ தெனிற் றிடுக் கிட்டேன் போதத் துயர் பட்டே னெனச் சொன்னது னின் மாது இராசே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal