தொண்டல்லோ ஓரிபாவா
thondallo oribaavaa
தொண்டல்லோ ஓரிபாவா தொண்டாளும் யோவா.
1.சீராளா தெய்வ பதமு செங்கோன் மைத்தாவீ தேந்திரன் சிம்மாசனாதிபதியே சென்றாளுமையா.
2. வானாட்டுச் சேனைக் கத்தா கானாட்டிலே பிறந்து மாநாட்டைக் கூட்டுதற்கோ வந்தாய் எந்தாய் நீ.
3. கர்த்தாவுக் கொரே பேறு விஸ்தார லோகங் கூறு கன முக்கிய வளமைகளோடு காத்தாளுங் கோவே.
4. அல்லற் படாமல் மாக்கள் செல்லப் பெருக்கில் வாழ்க ஆதிப் பரப் பிரமமே பாது காகாவே.
5. நம்மாதி கர்த்தரான ஞாலத் தாதித்த னென்ற இம்மானுவேலு மக்குத் துதியோசி யன்னா.
6. ஆசிக்கப்பட்ட அப்பா அன்பாக வந்த நட்பா அனாதியிப்போ தெப்போதும் தோத்திரமோ சன்னா.
7. உலக முண்டான முதல் வலிய பிதாக்கள் திரள் கலிலே மன்னா உமக்கு காத்திருந்தாரே.
8. பாட்டுச் சங்கீதங்களின் நாட்டிப் புகழைச் சொன்ன ஆட்டத் தவிது வாஞ்சித்து ஆசித்திருந்தான்.
9. ஆசியோனிலிருந்து வாசியா மிரட்சிப்பு வந்தால் அடிமைச் சிறையிருப்பைத் திருப்பீரோ அப்பா. `
10. இப்போது மீட்பரேயென் அப்பா வந்தீர் மெய்யாக இங்கேயோர் முன்னணையில் எங்கோ-மானாரே.
11. பரமண்டலத்தைவிட்டு பரதேசக் கோலமானீர் பண்ணவர் வணங்கும் நாதா பால் தேவையாச்சோ.
12. கடலுக் கெல்லையை வைத்தீர் கர்த்தா அனாதி வஸ்தே புடவையிற் சுற்றிப் புல்லிற் கிடத்தப்பட்டீரோ.
13. மெத்த மனங் கலங்கும் வேதநாயகன் பாட்டைச் சித்தமாய் கேட்டருளும் தேவ சிம்மம்மே.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal