திருக்கணுருக்கத் திருக்கமாய்ச் சற்றே
thirukkanurukkath thirukkamaays satre
திருக்கணுருக்கத் திருக்கமாய்ச் சற்றே திரும்பிப் பாரையா சற்றே சற்றே திரும்பிப் பாரையா
பருக்கப் பெருக்கத் திருக்கட் பாலரே பரம நன் மனுவேலரே படி மீதினிலடியேன் வெகு பாவியாகினுங் கோவியாகினும்
1.மெத்தவு மறுதலித்த சீடனை விரும்பிப் பார்த்தையே சித்த மாகவே வலது கள்ளனைச் சேணிற் சேர்த்தையே எத்தனையினம் பாவிகட் கெல்லா மிரக்கஞ் செய்தெனை பெருக்கமாகவே எளியேனதி லொரு பாதகன் எனை யாள்வ துனதுபாரமே
2. உலகத்தின் பவமனைத்தும் பொறுக்கு முனக் கெனின் பிழை பெரியதோ வலகர்த்த னுனின் பாடெமக் கல்லால் வானவர் தமக் குரியதோ வலதுற் குணர்களெமை யோ சீல நற்குணர் கடமையோ அன்பரைத் தேடி வந்தையோ உயிர் நண்பரை நாடித் தந்தையோ சொலு
3. தேசுமிக்க மெய்த்திருக் குமாரனே சீயோன் மணாளனே பேசுதற் கரிதான தேவ பிதாவி னாளனே மாசறுத்துனின் வேதநாயகன் வகுத்தப் பதத்தைப் பகுத்துப் பட்சமாய் மட்டிலா மிகு துட்டமே புரி கெட்ட பாவியை விட்டிடாமலே
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal