திரிதத்துவனே யொரு தேவனே
thiridhathuvanae yoru devanae
திரிதத்துவனே யொரு தேவனே செய சத்துவனே வருசீவனே திடநற் கிறிஸ்தாதி குமாரனே பர தேவ சே யோவாவே
மறையானே யிறையானே வாய்ந்த சாந்தகு ணேந்திரனே வாகனே யூகனே மனுவோர்க் கருடர வந்தவனே வலிமை யினாசனனே மகத்துவனே பலபவ மோசனனே பரத்துவனே வடிவங் கொண்டெனையாள வந்தகு தாமேசியாவே - திரி
1.அறிவினிலுயராதி பராபரா அதிசய அபிதான குணாகரா அளவிட அரிதான நிராதாரா சுர ஆதன வானகரா அம்பரா எம்பரா அந்தத் தந்தச் சுந்தரா ஆதரா சோதரா அசராசர தாபரசிரா அருளாகர பாரவ கோசரா தெருளீகர மாபரமே சுரா அகோர சத்துருசங்காரா கிருபாகர மித்துரு சிங்காரா - திரி
2. பரவெளியுரு வான சரீரியே பவவிருளற வானிறை மாரியே பல வரமருள் ஞான வுதாரியே யுயர் பாவலர் கேசரியே பரிவாயே தெரிவாயே பக்கிஷ விந்தைத்தயை புரியே பாரியே தாரியே பயமே தடுத் தெனையாதரியே பரலோக நிதானதி காரியே நரலோக கிருபாநதி வாரியே பரம்பர மந்திரி யனுசாரி கரி பரம தந்திரி யாசாரி - திரி
3. கருணையின் வதனா வொருவாமனா கடவுளர் சுதனா திருநாமனா கதிதருசாதனா வருவாமனா சிவ காரண வான மனா கனமானா தனவானா கர்த்தத்துவ ராசமனா காயனா நாயனா கலனா கவினா கலைக்கியானா கலிமோசன நேசவிலோசனா வலியாசன வாசவு லாசனா காதலனே யென தெசமானிகவி வேதநாயகன் வெகுமானி - திரி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal