திடமாய் முன்னாகச் செல்லுங்கோ
thidamaay munnaagas sellungo
திடமாய் முன்னாகச் செல்லுங்கோ செய்திகளெல்லாம் சீயோன் மகட்குச் சொல்லுங்கோ.
புடவியனைத்தும் மீட்கக் கடவுளுதித்தா ரென்றிங் குடனே யெருசலையினிடம் நீர் சேடியரோடி.
1.சங்கை வளங்கள் காட்டி பாவிகளுக் கிங்கிதக் கிருபைக் கைநீட்டித் துங்கன்றவிது ராசன் வங்கிஷந்தழைக்க வுல கெங்குஞ் செழிக்க வந்தார் உங்களரசனென்று.
2. மாகனத் தோடங்கனேரண்டு நிசமறி வாகனத் திலேறிக் கொண்டு ஆகமத்தின் படியுனக்காக மெத்தனவுள்ளோராய் ஏக தத்துவக் குமாரன் றாகமுற்றெழுந்தாரென்று.
3. வேதாளத்தையு மாட்டி அதிநரக பாதாளத்தையும் பூட்டி ஆதாங் குலத்தை நாட்டித் தீதாம் பாவத்தை வாட்டி ஏதோ தயை பாராட்டி யீதோ வந்தாரென் றீட்டி.
4. மோட்ச வாசலைத் திறந்தார் முடிவில்லாத மாட்சிமை யாகச் சிறத்தார் காட்சி பெறவே யுன்னைப் பூச்சிய மண முடிக்க ஆச்சரியமாய் வந்தார் சாட்சி நாங்களே யென்று.
5. விந்தைக் கீதங்கள் நீடி வேதநாயகன் சந்தப் பதங்கள் பாடி அந்தத்துட னெழுந்த சொந்தத்துரையைக் கண்டு சந்திப்பதற்கு வாவுன் சிந்தை கலங்காய் என்று.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal