தன்னுயிர் விட்டிறந்துயிர்த்தானே
thannuyir vittirandhuyirthaanae
தன்னுயிர் விட்டிறந்துயிர்த்தானே யேசு நாயகன் சிறப்பாய்
1.வன்ன மலர்க் காவிற்பாம் பாற் றுன்னும் வினையாவுந் தீர முன்னனையிலே பிறந்த உன்னதன்றன் திருவுளத்தால்- தன்னு
2. முந்து நரர் செய்தபவத் துந்தும் வினையாவுந் தீரப் பொந்திப்பிலாத்திறை முன்பாக நித்தனைப் பாடடைந்தன்பாக- தன்னு
3. தோன்று கிருபையின் சிநேகச் சூரிய பிரகாச மாக ஆன்ற மகிமைத் திரியேக அட்செயக் கிறிஸ்து மெய்யாக- தன்னு
4. ஆதி முதல் வாரத் தன்று அக்கிரமப் பசாசை வென்று மாதவர் பன்னிருவர் போற்ற மகதலா மரி கண்டேற்ற- தன்னு
5. தீர்க்கத் தெரிசனங்கள் தீட்டி மார்க்கமுடன் விரித்துக் காட்டி யார்க்குங் கிருபையைக் கைநீட்டி பராக்கிரமத் தேவாட்டுக்குட்டி- தன்னு
6. தூதரிரு பெயர் துலங்கக் காதக ரெல்லாங் கலங்க வேத மறையே முழங்க மெய்ச் சபை மென்மேல் விளங்க- தன்னு
7. அக்கிரமத்தின் பாவ கட்டு நிர்க்கிரகங்களாகிக் கெட்டு துர்க்கிரிகைப் பிசாசை விட்டு நற்பிரியர் களாக்கப்பட்டு- தன்னு
8. தேவசமாதானம் நீடச் செந்தழற்க பாட மூட மேவுங் கிருபையே கைகூட வேத நாயகன் பண் பாட- தன்னு
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal