தந்தைப் பராபரன்
thandhaip paraabaran
தந்தைப் பராபரன் றந்தருள் பாலா தமியனைக் காத்தருளுந் ததி சீலா.
1. விந்தைக் குணாலா மெய்மறை நூலா மேசியாவே சுராச மனுவேலா.
2. உன்னதப் பிரானே யுனக்கடியானே யென்னை யிரட்சித் தருளுஞ் சீமானே.
3. ஆற்றும நாதா அற்செய பொற்பாதா காத்தருளுங் கருணைத் தாதா.
4. வரங்களின் கையா மகிமையின் துய்யா இரங்கும் மிரங்குங் கிறிஸ்தையையா.
5. கருணைக் கண் பாருஞ் கலிவினை தீருஞ் சரணஞ் சரணமையா தயை கூரும்.
6. மேலான வாழ்வே மெய்யே யோவாவே காலா காலத்தி லெனைத் தற்காவே.
7. சத்துருத் துரோகஞ் சற்பினைப் பூலோகம் சித்தமிரங்கி யருள் திரியேகம்.
8. கருணைப் பத்தாவே கரிசித்துக் காவே கை விடா தேயு மொரு கர்த்தாவே.
9. மீண்டருளன்பா வேதநாயகன்பா ஆண்டருளுந் தயை வைத்தன்பா.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal