தந்தாயுமக்காயிரந்தரங்களே
thandhaayumakkaayirandharangalae
தந்தாயுமக்காயிரந்தரங்களே தோத்திரங்களே சங்கீர்த்தனம் சங்கீர்த்தனங்களே.
1.வானம் புவியும் படைத்த நாதனே அளவில்லாத மகத்துவமிகும் திரித்துவ தேவனே ஞானமே நரர் உருவமாகிய இயேசு கிறிஸ்து நாயகா உமை பூசை செய்கிறோம் கோனராதிப தவிது வங்கிஷமே மரிய கன்னிகை குமரனாய் வரும் ஒரு பரம்பரா மானுவேலுமக் காயிரந்தரமே சங்கீர்த்தனமே வலிய கிருபை செய்யுமிஸ் தோத்திரமே
விருத்தம்: ஆறு லெக்ஷண சொரூபா அனந்த பேரின்பா போற்றி ஈறில்லா தென் றுந்தானா இருக்கு மெய்ப்பொருளே போற்றி பேறுதந் தளிக்க வல்ல பிதாவினோர் மைந்தா போற்றி மாறில்லாக் கருணை யானே மானுவேல் போற்றி போற்றி.
2. தப்பில்லாத சத்திய சொரூபியே பரம ரூபியே தாவீதரசன் தொழும் பிரதாபியே ஒப்பில்லாத தயை விசாலமே ஆதிமூலமே ஒருவனே யுமைப் பூசை செய்கிறோம் முப் பொருளொரு தேவவஸ்துவே அருள் கிறிஸ்துவே முதல்வனே யுமக் கோம் நமஸ்துவே செப்புதற்கரிதான நேசமே பவவிநாசமே திருவுளஞ் செய்யும் நல்விசுவாசமே
விருத்தம்: அந்தர சொற்கம் பூமி அனைத்தையும் படைத்தாய் போற்றி முந்தின மனுடராலே முன்னணைக் கெழுந்தாய் போற்றி தந்தையர்க்கொரே பேறான தனையசுந்தரமே போற்றி மைந்தர்கள் வடிவமான மானுவேல் போற்றி போற்றி
3. சீனா வெற்பினில் எழுந்த காட்சி யேமோசேக் களித்த திருக்கற்பினையின் இரண்டு சாட்சியே கோனான் றவிது மண்டலாதிபன் ஆசனத் தெழும் கொற்றவா உமைப் பூசை செய்கிறோம் கானான் தேசம் இஸ்ரவேலர்க்கே சுதந்தரமாகி கருதலரைச் சங்கரித்த கருத்தனே ஞானதிக்கமே திருவிரக்கமே ஒம்பிரணவம் நம்பினோம் அருளம்பரா பரா.
விருத்தம்: ஆதியம்பரனே போற்றி அளவில்லா சுபமே போற்றி சாதிகள் நடுவா போற்றி சருவ காரணனே போற்றி பேதகமில்லாய் போற்றி பெத்தலைப்பதியே போற்றி மாதிடம் வந்தாய் போற்றி மானுவேல் போற்றி போற்றி.
4. ஆதியி லாதி யோடிருந்த வார்த்தையே மாங்ஷமாகி அகிலத்தின் பவம் அனைத்தும் தீர்த்தையே பாத காணிக்கை மூவர்களும் வைத்து தாழ விழுந்து பரமனே யுமை பூசை செய்கிறோம் சீத ஒளி நட்சத்திரங் கண்டுமே கிழக்கிலிருந்து தேடி வந்தனந் திவ்விய பாலனே சாதி யாவையும் மீட்க வந்தவா பாதுகாத் தெமை பாதுகாத் தெமை தாங்கி ரெட்சியும் சரணம் சரணமே
விருத்தம்: தனி முதலவனே போற்றி தற்சுயஞ் சோதி போற்றி கனமிகுந்தவனே போற்றி கருணை யாங்கடலே போற்றி வினைதடுத் தாண்டாய் போற்றி மேசியா வேந்தே போற்றி மனுடவதாரா போற்றி மானுவேல் போற்றி போற்றி.
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal