தமி யோர்க்கருள் செய்யும
thami yorkkarul seyyuma
தமி யோர்க்கருள் செய்யும ரூபி சமஸ்த நன்மைச் சொரூபி அரூபி
அமலா அருவுருதற் பரம திரித்துவ மகிமைத்திரு முதலே அம்பரா அனாதி மெய்ச்சிதம்பரா கருணாம்பர மேதுதி
1.காரணத்திரு அருளே-காட்சிப்பரம் பொருளே ஆரண சுந்தரமே நிரந்தரமே சுதந்தரமே பதம் துணையே பூரண உத்தம ஆறுதலேயுதாரண நித்திய தேறுதலே புகழும் புது மனதில் கன பணிவில் பொறை மிகு சற்குண முறவே புனிதா கிருபைப்பத் ராசனுதா உனதா உனதருள் புரி - தமி
2. ஆகமகலை க்யானி அதிசயத்தொரு ஞானி ஏகமறை நிதானி அவதானி வெகுமானி அக்கினி மேனி வேகத் தெமை மகிழ்ந் தாற்றுவையே என் தேகப்-பவவினை மாற்றுவையே விடிவே விடநரகக் கொடியபவக் கடணுலையத் திடனருளே மேன்மைப் பிரதாப மகத்துவ பான்மைக் கிருபாநதியே துதி - தமி
3. நித்திய திரித்துவவே நெசத்ததி நவமே துத்திய மகத்துவமே வழுத்துவமே ஒருத்துவமே பரத்துவமே சத்திய உத்தமதாபரமே கனவெற்றி யளித்த பராபரமே தருணம் சதிவினை சற்பினை களறக் கதிவழியில் புக அருளே சதிராய் வேதநாயகன் அதிராய்க்கவி சொல் கருணாம்பரம் - தமி
Related songs
- அசரீரி சக்கரி அருளுவரிasareeri sakkari aruluvariVedanayagam Sastriar
- அடடா பழைய சற்பமேadadaa pazhaiya sarpamaeVedanayagam Sastriar
- அண்ட சக்கர ஞானேanda sakkara gnaanaeVedanayagam Sastriar
- அதிசயமான புண்ணியம்adhisayamaana punniyamVedanayagam Sastriar
- அதிசயம் பெருகவிழி பாரும்adhisayam perugavizhi paarumVedanayagam Sastriar
- அத்தா வத்தா நமஸ்காரமேathaa vathaa namaskaaramaeVedanayagam Sastriar
- அனந்தஞான சொரூபா நமா ஓம்anandhagnaana soroobaa namaa omVedanayagam Sastriar · Keerthanaigal
- அமலா தயாபரா அருள்கூர் ஐயாamalaa thayaabaraa arulgoor aiyaaVedanayagam Sastriar · Keerthanaigal